Press "Enter" to skip to content

விளையாடவில்லை, அணிகள் வெளியீடு செய்கின்றன: மேக்ஸ்வெல் குறித்து கம்பிர் கருத்து

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் அணி மாறியது குறித்து கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் எப்போதுமே அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் விளையாடிய அவரை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான் மேக்ஸ்வெல் அணி மாறுவதற்கு காரணம் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் அதிகமான அணிகளுக்காக வி்ளையாடியிருக்கமாட்டார். அவர்கள் அதிக அணிகளுக்காக விளையாடியதற்கு காரணம், அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான்.

இதற்கு முன் இருந்த அணிகளில் அவரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை எனக் கூற முடியாது. டெல்லிக்காக விளையாடும்போது அவருக்கு சுதந்திரம் அதிகமாக இருந்தது. பெரும்பாலான அணிகள், பயிற்சியாளர்கள், அவர் அணியின் முக்கியமானவர் என்பதால், அவரால் எந்த இடத்தில் ஜெயிக்க முடியுமோ, அதை வழங்கினாரகள்.

மிகவும் துரதிருஷ்டவசமானது, அவரால் வெற்றி பெற முடியாததுதான். 2014 ஐபிஎல் தொடரில் மட்டும் தீப்பொறியாக இருந்தார். அப்படியே விளையாடியிருந்தால் எந்த அணியும் அவரை வெளியீடு செய்ய வேண்டும் என நினைத்திருக்காது. அந்த்ரே ரஸலை எடுத்துக்கொண்டால் கொல்கத்தா அணியில் அவர் நீண்ட காலமாக இருக்கிறார்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »