Press "Enter" to skip to content

நாங்கள் அதிர்ஷ்டசாலி: ரோகித் சர்மா சொல்கிறார்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்குள், பெரும்பாலானோர் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஒருபக்கம் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இன்றி மூட்டிய மைதானத்திற்குள் நடைபெற இருக்கிறது.

நாளை 2021 பருவத்தில் முதல் போட்டி சென்னையில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா நேரத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுவது அதிர்ஷ்டம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஏராளமான மக்கள் கடினமான நிலையில் உள்ளனர். ஏராளமான மக்கள் அவர்களது வேலையை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் விரும்புவதைக் கூட செய்ய முடியவில்லை. குறைந்த பட்சம் நாங்கள் விரும்புவதை செய்ய முடிகிறது என்பதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

குறைந்தபட்சம் நான் கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக சற்று அனுசரித்து செல்ல வேண்டுமென்றால், நாம் அனுசரித்துக் கொள்ள வேண்டும். பயோ-பப்பிள் செக்யூரில் நாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத் முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »