Press "Enter" to skip to content

159 ஓட்டங்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

கிறிஸ் லின் 49 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், இஷான் கிஷன் 28 ரனகளும் அடிக்க, ஹர்ஷல் பட்டேல் 5 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. ரோகித் சர்மா, கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மும்பை அணி 4 சுற்றில் 24 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருன் கிறிஸ் லின்னும் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது.

சிறப்பாக மட்டையாட்டம் செய்து கொண்டிருந்ததத சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

சூர்யகுமார் ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 94 ரன்களும், கிறிஸ் லின் ஆட்டமிழக்கும்போது 12.5 சுற்றில் 105 ரன்களும் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 13 ஓட்டங்கள் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் 16 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

18-வது ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 19 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி எளிதான கேட்சை விட்டார். ஜேமிசன் இந்த சுற்றில் 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

அடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் பந்தில் குருணால் பாண்ட்யா 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பொல்லார்டை வீழ்த்தினார். 4-வது பந்தில் ஜான்சனை க்ளீன் போல்டாக்கினார்.

இந்த சுற்றில் ஒரு ஓட்டத்தை மட்டுமே விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 159 ஓட்டங்கள் அடித்தது. ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 சுற்றில் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 மட்டையிலக்கு சாய்த்தார்.

பின்னர் 160 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி மட்டையாட்டம் செய்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »