Press "Enter" to skip to content

அப்பாடா… ஒருவழியாக சேப்பாக்கம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி

சேப்பாக்கம் மைதானம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் ஆர்சிபி அணிக்கு, நேற்று வெற்றி கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஆறு மைதானங்களில் மட்டுமே நடக்கிறது.

எந்த அணியும் அதனுடைய சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. பொதுவான மைதானத்தில் விளையாடுகிறது. 

ஆர்சிபி முதல் மூன்று போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஆர்சிபி-க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே வேப்பங்காய்தான். ஆம்… அந்த அணி நேற்றைய போட்டிக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 

2008-ல் அனில் கும்ப்ளே தலைமையிலான அணி சிஎஸ்கே-வை 14 ஓட்டத்தில் வீழ்த்தியிருந்தது, அதன்பின் வெற்றி பெற்றதே கிடையாது. முதல் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால், ஆர்சிபி ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

ஆனால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆர்சிபி வருகிற 14-ந்தேதி ஐதராபாத்தையும், 18-ந்தேதி கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »