Press "Enter" to skip to content

தவான், பிரித்வி ஷா அதிரடி – சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையை கடைசிப் பந்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ஓட்டங்கள் குவித்தார். மொயீன் அலி 36 ஓட்டங்கள், அம்பதி ராயுடு 23 ஓட்டங்கள், ரவீந்திர ஜடேஜா 26 ஓட்டங்கள் (நாட் அவுட்) அடித்தனர். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ஓட்டங்கள் விளாசினார்.

டெல்லி சார்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர். அஷ்வின், டாம் கர்ரன் தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர்.

இதையடுத்து 189 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆடினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ஓட்டங்கள் குறையாமல் எடுத்தனர்.

முதலில் பிரித்வி ஷா அரை சதமடித்தார். அவரை தொடர்ந்து ஷிகர் தவானும் அரை சதமடித்தார்.

முதல் மட்டையிலக்குடுக்கு இருவரும் 138 ஓட்டங்கள் சேர்த்தனர், பிரித்வி ஷா 38 பந்தில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். டெல்லி அணியின் எண்ணிக்கை 167 ஆக இருக்கும்போது தவான் அவுட்டானார். அவர் 54 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஸ்டாய்னிஸ் 14 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில் டெல்லி அணி 3 மட்டையிலக்குடுகளை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

சென்னை சார்பில் ஷர்துல் தாக்குர் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »