Press "Enter" to skip to content

முன்னாள் கிரிக்கெட் வீரரை துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல்

கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கிலை கடத்தல்காரர்கள் ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடுமையாகத் தாக்கிவிட்டு பின்னர் விடுவித்துள்ளனர்.

சிட்னி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில்.  இவர், கடந்த மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் , மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

சிட்னி நகரின் வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கொண்டு சென்ற 4 பேரும், அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒரு மணிநேரம் மெக்கில்லை கடுமையாகத் தாக்கிவிட்டு அவரை விடுவித்துள்ளனர். 

தன்னைக் கடத்தி, தாக்கியது குறித்து நியூ சவுத்வேல்ஸ் காவல்துறையில் மெக்கில் புகார் அளித்தார். இது தொடர்பாக நியூ சவுத்வேல்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் காவல் துறை அதிகாரி அந்தோனி ஹால்டர் கூறும் போது ‘பணத்துக்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம். இந்த கடத்தல் விவகாரம் குறித்து எங்களுக்கு 20ம் தேதிதான் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், 4 சிறப்பு தனிப்படைகள் உதவியுடன் தீவிரமாக தேடினோம். அப்போது இந்த கடத்தலில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்தோம்’ எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மெக்கில் 1998 முதல் 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக சோதனை போட்டிகளில் விளையாடியுள்ளார். 44 சோதனை போட்டிகளில் விளையாடிய மெக்கில் 208 மட்டையிலக்குடுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »