Press "Enter" to skip to content

ஸ்பெயின் பார்முலா1 தேர் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடந்தது.

கோப்பையுடன் ஹாமில்டன்

பார்சிலோனா:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. 308.424 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) எதிர்பார்த்தது போலவே முதலாவது வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் எட்டி வெற்றி கண்டார். அவரை விட 15.841 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 3-வது இடத்தை பிடித்தார்.

இந்த பருவத்தில் 3-வது வெற்றியை ருசித்த ஹாமில்டன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் மொத்தம் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெர்ஸ்டப்பென் 80 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 5-வது சுற்று போட்டி வருகிற 23-ந்தேதி மொனாக்கோவில்நடக்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »