Press "Enter" to skip to content

சோதனை தரவரிசையில் இந்தியா முதலிடம் – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு

லண்டனில் நடைபெற உள்ள உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட சோதனை அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை விட ஒரு புள்ளி குறைவாக பெற்றிருக்கும் நியூசிலாந்து இரண்டாவது இடம் வகிக்கிறது.

இந்நிலையில், சோதனை அணிகள் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக வலம் வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

நம்பர் ஒன் மகுடத்தை சூடுவதற்கு மனஉறுதிமிக்க போராட்டமும் இலக்கை நோக்கி நிலையான முழு கவனமும் தேவை. இவற்றை தற்போதைய இந்திய அணி செய்து காட்டியுள்ளது. நம்பர் ஒன் இடத்துக்கும், பாராட்டுக்கும் இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்.

உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டிக்கான விதிமுறைகளில் பாதியில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஒவ்வொரு தடைகளையும் இந்திய அணி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது. கடினமான நேரத்தில் நமது வீரர்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சூப்பராக பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »