Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனோ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வில்வித்தை: ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்பு. அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி பங்கேற்பு.

தடகளம்: நீரஜ் சோப்ரா, சிவ்பால் சிங் ( ஈட்டி எறிதல்), பாவ்னா, பிரியங்கா கோஷ்வாமி (மகளிர் 20 கி.மீ நடை பந்தயம்), இர்பான் தோடி , ராகுல் , சந்தீப் குமார் (20 கி.மீ. நடைபந்தயம்), முகமது அனாஸ், வி.கே.விஷ்மயா, நிர்மல் நோவா, ஜிஷ்னா மேத்யூ (4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்)

எம்.ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்), கமல்பிரீத் கவுர் (மகளிர் வட்டு எறிதல்).

குத்துசண்டை: சதீஷ் குமார் (91 கிலா), ஆஷிஸ் குமார் (74 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 69கிலோ), விகாஷ் கிருஷ்ணன் ( 69 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), அமித் பங்கால் ( 52 கிலோ), மேரி கோம் (மகளிர் 51 கிலோ), சிம்ரன்ஜி (மகளிர் 60 கிலோ), மணீஷ் கவுசிக் (63 கிலோ).

குதிரையேற்றம்: பவுத் மிர்சா ( தனிநபர் பிரிவு)

வாள்வீச்சு: பவானி தேவி (மகளிர் சேபர்)

ஜிம்னாஸ்டிக்: பிரணதி நாயக் (மகளிர் ஆர்ட்டிஸ்டிக்)

ஆக்கி: ஆண்கள், பெண்கள் அணி.

துடுப்பு படகு: அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங் ( லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)

பாய்மரபடகு: நேத்ரா குமணன் (மகளிர் லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டாண்டர்டு), கே.சி.கணபதி, வருண் தாக்குர் (ஸ்கீப் 49இஆர்)

துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் பிரிவு): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, இளவேனில் , மனு பாகர், ய‌ஷஸ்வினி தேஸ்வால், ராகி சர்னோபாத், திவ்யானேஷ் பன்வார், சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார், அங்கத் வீர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்.

(கலப்பு அணிகள் பிரிவு): திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் மற்றும் தீபக் குமார், அஞ்சும் மவுத்கில். சவுரப் சவுத்ரி, மனு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா, ய‌ஷஸ்வினி சிங் தேஸ்வால்.

டேபிள் டென்னிஸ்: சரத் கமல், சத்யன் ( ஒற்றையர்), மணிகா பத்ரா சுதிர்தா முகர்ஜி (மகளிர் ஒற்றையர்). சரத்கமல், மணிகா பத்ரா (கலப்பு இரட்டையர் பிரிவு)

மல்யுத்தம்: ரவி தகியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக் (மகளிர் 57 கிலோ), சோனம் மாலிக் (மகளிர் 62 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), சீமா பிஸ்லா (மகளிர் 50 கிலோ).

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »