Press "Enter" to skip to content

இங்கிலாந்து சோதனை தொடர் – காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் சோதனை தொடர் அடுத்த மாதம் 4-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

புதுடெல்லி:

இந்தியா, கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம்  நடந்தது. இதில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக கவுண்டி லெவன் அணிக்காக களம் இறங்கிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2-வது நாளில் மட்டையாட்டம் செய்தபோது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து கைவிரலில் தாக்கியது.

இதில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காயம் குணமடைய குறைந்தபட்சம் 5 வாரம் பிடிக்கும் என்பதால் அவர் வரும் 4-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். 

இதேபோல் ,இந்த போட்டியில் எதிரணிக்காக ஆடிய இந்திய வலைப்பயிற்சி பவுலர் அவேஷ்கான் பெருவிரலில் காயம் அடைந்தார். காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் இருவரும் நாடு திரும்ப இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »