Press "Enter" to skip to content

ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்த மேரிகோம், மன்பிரீத் சிங்

விழாவின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து அரங்கினுள் வந்தனர்.

டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்போட்டியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.

ஜப்பான் அரசர் நருஹிட்டோ, பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

விழாவின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து அரங்கினுள் வந்தனர். முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது. அதன்பின்னர் அகரவரிசைப்படி மற்ற நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.

குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.

ஒலிம்பிக்கில் இந்திய  வீரர், வீராங்கனைகள், 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »