Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி – ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 74 ஓட்டங்கள் சேர்த்தது.

கொழும்பு:

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில்  நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கும் 47 சுற்றுகள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

அதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 சுற்றில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து அனைத்து மட்டையிலக்குகளையும் இழந்தது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.

மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ  சிறப்பாக ஆடி 76 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்ச 65 ஓட்டத்தில் அவுட்டானார்.  இலங்கை அணிக்கு எக்ஸ்ட்ராஸ் மட்டுமே 30 ஓட்டங்கள் கிடைத்தது.

இறுதியில் இலங்கை அணி 7 மட்டையிலக்கு இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.   

இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 3 மட்டையிலக்குடும், சகாரியா 2 மட்டையிலக்குடும், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது. 

ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »