Press "Enter" to skip to content

வில்வித்தை: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தருண்தீப் ராய் தோல்வியடைந்து வெளியேற்றம்

முதல் சுற்றில் உக்ரைன் வீரரை 6-4 என வீழ்த்திய தருண்தீப் ராய், 2-வது சுற்றில் ஷுட் ஆஃப் பாயிண்ட்-ல் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஒலெக்சீ ஹன்பின்-ஐ எதிர்கொண்டார். இதில் 1-1 (25-25), 1-3 (27-28), 2-4 (27-27), 4-4(26-24), 6-4 (28-25) என 6-4 செட் பாயிண்ட்-ல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த இட்டே ஷன்னியை எதிர்கொண்டார். தருண்தீப் ராய்க்கு இஸ்ரேல் வீரர் இட்டே கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை இட்டே 28-24 என கைப்பற்றினார். 2-வது செட்டை தருண்தீப் ராய் 27-26 என கைப்பற்றினார்.

3-வது செட்டில் (27-27) இருவரும் சமமான புள்ளி பெற்று 1 பாயிண்ட் பெற்றனர். 4-வது செட்டை தருண்தீப் சாய் (28-27) என கைப்பற்றினார். இதனால் தருண்தீப் ராய் 5-3 என முன்னிலை பெற்றிருந்தார். 5-வது மற்றும் கடைசி செட்டை டிரா செய்தாலே 6-4 என செட் பாயிண்ட் பெற்று  வெற்றி பெற்றுவிடலாம் என தருண்தீப் ராய் நினைத்த நிலையில், 5-வது செட்டை 27-28 என இழந்தார்.

இதனால் ஐந்து செட்கள் முடிவில் இருவரும் 5-5 என செட் பாயிண்ட்கள் பெற்று சமம் அடைந்தனர். இதனால் ஷூட்-ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் வீரர் ஷன்னி  முதல் அம்மை எய்து 10 புள்ளிகள் பெற்றார். ஆனால் தருண்தீப் ராயால் 9 புள்ளிகளே பெற முடிந்தது. இதனால் தருண்தீப் ராய் 5-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »