Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா அணியிடம் கெத்து காட்டிய வங்காளதேசம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.

டாக்கா:

ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிக்களுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 7 மட்டையிலக்குடுகளை இழந்து 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ஓட்டங்கள் எடுத்தார்.

வங்காளதேசம் அணி தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணி 18.4 சுற்றில் 123 ஓட்டங்கள் எடுத்து 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது. 

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிக்களுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி 6-ம் தேதி நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »