Press "Enter" to skip to content

டி.என்.பி.எல்.: மதுரையை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தொடக்க பேட்ஸ்மேன் கவுசிக் காந்தில் 50 பந்தில் 64 ஓட்டங்கள் அடிக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மதுரை அணியை 5 மட்டையிலக்கு வீழ்த்தியாசத்தில் வீழ்த்தியது.

சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

அதன்படி, மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் தான் சந்தித்த 2 பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்டார. ஆனால்,  அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மட்டையிலக்குகள் சரிய தொடங்கியது. 85 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 மட்டையிலக்குடுகளை இழந்தது தடுமாறியது.

இதனையடுத்து மதுரை அணியின் கேப்டன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 124 ஓட்டங்கள் எடுத்தது.  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார்.

பின்னர் 125 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது. கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெகதீசன் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சீனிவாஸ் 2 ரன்னிலும், சசிதேவ் 18 ரன்னிலும், சாய் கிஷோர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் கேப்டன் கவுசிக் காந்தி அபாரமாக விளையாடி 50 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கவுசிக் காந்தி ஆட்டமிழக்கும்போது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17.3 சுற்றில் 115 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன்பின் 18.5 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 மட்டையிலக்கு வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சித்தார்த் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »