Press "Enter" to skip to content

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் 2 ஓட்டத்தில் வெற்றி – தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ராகுல் கருத்து

எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து ராஜஸ்தான் 4-வது வெற்றியை பெற்றது.

துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 185 ஓட்டத்தை குவித்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது.

ஜெய்ஷ்வால் 36 பந்தில் 49 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மகிபால் லோம் ரோர் 17 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), லீவிஸ் 21 பந்தில் 36 ரன்னும் (7 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப்சிங் 5 மட்டையிலக்குடும், முகமது ‌ஷமி 3 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்புக்கு 183 ஓட்டத்தை எடுத்தது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.

மயங்க் அகர்வால் 43 பந்தில் 67 ரன்னும் (7பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 33 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

கார்த்திக் தியாகி 2 மட்டையிலக்குடும், சஹாரியா, ராகுல் திவேதியா தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டியது. கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் ஆட்டத்தை மாற்றியது. கடைசி 2 சுற்றில் பஞ்சாப் வெற்றிக்கு 8 ஓட்டத்தை தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய முஸ்தாபிசூர் ரகுமான் 4 ஓட்டத்தில் கொடுத்தார்.

கடைசி சுற்றில் பஞ்சாப் வெற்றிக்கு 4 ஓட்டத்தை தேவைப்பட்டது. கைவசம் 8 மட்டையிலக்கு இருந்தது. கார்த்திக் தியாகி முதல் பந்தில் ஓட்டத்தை கொடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ஓட்டத்தை கொடுத்தார்.

3-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை அவுட் செய்தார். 4-வது பந்தில் தீபக் ஹூடா ஓட்டத்தை எடுக்கவில்லை. 5-வது பந்தில் ஹூடா ஆட்டம் இழந்தார். இதனால் கடைசி பந்தில் 3 ஓட்டத்தை தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. கார்த்திக் தியாகியின் அபாரமான பந்து வீச்சால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

எளிதில் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை பஞ்சாப் அணி கோட்டை விட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் 5ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். சிறப்பாக ஆடியும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு ராகுல் கூறினார்.

பஞ்சாப் அணி 6-வது தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4-வது வெற்றியை பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »