Press "Enter" to skip to content

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி

சூப்பர் 12 குரூப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தொடக்க சுற்றில் அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.

டி20 உலகக்கோப்பையின் தொடக்க சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அயர்லாந்து- நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் மட்டையாட்டம் செய்த நெதர்லாந்து 20 சுற்றில் 106 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 107 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. பால் ஸ்டிர்லிங் (30), காரேத் டெலானி (44) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் நமீபியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் மட்டையாட்டம் செய்த நமீபியா அணி  96 ஓட்டத்தில் சுருண்டது. பின்னர் 97 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி மட்டையாட்டம் செய்தது. 26 ஓட்டங்கள் எடுப்பதற்குள்  3 மட்டையிலக்குடை இழந்தது.

அதன்பின் வந்த பனுகா ராஜபக்சே 27 பந்தில் 42 ஓட்டங்கள், அவிஷ்கா பெர்னாண்டோ 28 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை 13.3 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »