Press "Enter" to skip to content

டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கக் கூடாது – ஷேன் வார்னே வலியுறுத்தல்

திறமை தான் நிரந்தரம். எனவே டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

துபாய்:

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.

இந்த போட்டியின் சூப்பர் 12 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், சமீப காலமாக நடந்த ஆட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 0, 2 என ஓட்டங்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வார்னே கூறுகையில், டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ஓட்டங்கள் எடுக்கவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர். 

திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி20 உலக கோப்பை போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »