Press "Enter" to skip to content

சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாத விரக்தி – சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையரான வீரர்

டி 20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து 3 போட்டிகளிலும் தோற்றதால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

சார்ஜா:

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது.

இதற்கிடையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் சூப்பர் 12 சுற்றுக்கு  தகுதி பெறும் வாய்ப்பை இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாததால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணி ஆல்-ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரிடையராவதாக நேற்று அறிவித்தார். 

ரியான் 2006-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ஓட்டங்கள் குவித்தார். அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ஓட்டங்கள் குவித்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »