Press "Enter" to skip to content

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று- ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை சூப்பர்12 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

துபாய்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப்- 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், இரண்டாம் குழு (குரூப்-2)ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி மட்டையாட்டம் செய்கிறது.

ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் விண்மீன்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹாசில்வுட்.

தென் ஆப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா, குயின்டன் டி காக், ஐடன் மார்க்ராம், ராசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்றிச் கிளாசன், டுவைன் பிரிட்டோரியஸ், ரபாடா, கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »