Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து – ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தல்

சோதனை அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

கிங்ஸ்டன்:

அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 24 ஓட்டத்தை வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து 5 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன.

இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.

டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 சுற்றில் 212 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ஓட்டத்தில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 மட்டையிலக்குடும், கிரேக் யங் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது. ஆன்டி மெக்பிரின் 59 ரன்னும், ஹாரி டெக்டர் 52 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், அயர்லாந்து 44.5 சுற்றில் 8 மட்டையிலக்குடுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அகில் ஹுசைன், ரோஸ்டன் சேஸ் தலா 3 மட்டையிலக்கு சாய்த்தனர். 

அயர்லாந்து அணி வீரர் ஆன்டி மெக்பிரின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »