Press "Enter" to skip to content

தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக மட்டையாட்டம் செய்தார்கள் – ரிஷப் பண்ட் பேட்டி

இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதும் தோல்விக்கான காரணம் என்றும் இந்திய மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் குறிப்பிட்டுள்ளார்.

பார்ல்: 

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 மட்டையிலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்திருப்பதாவது:

கடந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்தோம், இந்த போட்டியில் நாங்கள் முதலில் மட்டையாட்டம் செய்தோம், எனவே அவர்கள் மட்டையாட்டம் செய்யும் போது, ​​ஆடுகளம் மட்டையாட்டம்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.  அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக மட்டையாட்டம் செய்தார்கள் அதனால்தான் அவர்கள் இலக்கைத் துரத்தினார்கள். மிடில் ஓவர்களில் எங்களுக்கு போதுமான மட்டையிலக்குடுகள் கிடைக்கவில்லை. அவர்கள் (தென்ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள்) சீரான முறையில் பந்து வீசினார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவதற்குப் பழகிவிட்டனர். 

நாங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம்.  நீண்ட காலத்திற்கு 50 ஓவர் ஆட்டத்தில் விளையாடாததது தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு அணியாக, நாங்கள் எப்போதும் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம், வரும் போட்டிகளில் அவற்றை சரிசெய்ய முடியும் என்று நம்புகிறோம் இவ்வாறு தமது பேட்டியின்போது ரிஷப் பண்ட் குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »