Press "Enter" to skip to content

பரமத்திவேலூரில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசளிப்பு

பரமத்திவேலூரில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கபாடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

முன்னதாக போட்டிகளை நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். கபாடி போட்டியில் , நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 முன்னணி கபாடி அணிகள் கலந்துகொண்டன.

போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் குமாரபாளையம் அன்னை தெரசா அணியானது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அணிச்சம்பாளையம்  பிரதர்ஸ் அணியை 20:16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் மருத்துவர் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கபாடி அணிகளுக்கு, சுழற்கோப்பையுடன் முதல் பரிசு குமாரபாளையம் அன்னை தெரசா அணிக்கு ரூ. 10,001, 2-ம் பரிசு அணிச்சம்பாளையம் அனிச்சை பிரதர்ஸ் அணிக்கு ரூ. 7,001-, 3,4-ம் பரிசுகள், கண்ணீர் துளி மற்றும் திருச்செங்கோடு முரளி பிரதர்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 4001- ஆகிய பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி , நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் முத்துகுமார், பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் அருண், கட்சி நிர்வாகிகள், மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »