Press "Enter" to skip to content

தோற்று விட்டதாகவே உணர்வு ஏற்பட்டது- லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல்

கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் லக்னோ பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை டி.ஒய்.படேல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 210 ஓட்டத்தை குவித்தது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டி காக் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10 சிக்சருடன் 140 ஓட்டங்கள் குவித்தார். ஐ.பி.எல். போட்டியில் இது 3-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான லோகேஷ் ராகுல் 51 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 68 ஓட்டங்கள் எடுத்தார்.

ஐ.பி.எல். வரலாற்றில் தொடக்க ஜோடியின் அதிக ஓட்டத்தை இதுவாகும். இதன் மூலம் குயின்டன் டி காக்கும், ராகுலும் சாதனை படைத்துள்ளனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்தில் 50 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) நிதிஷ் ராணா 22 பந்தில் 42 ரன்னும் (9 பவுண்டரி), ரிங்கு சிங் 15 பந்தில் 40 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), சாம் பில்லிங்ஸ் 24 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மோஷின்கான், ஸ்டோனிஸ் தலா 3 மட்டையிலக்குடும், கிருஷ்ணப்பா, ரவி பிஸ்னோய் தலா 1 மட்டையிலக்குடும் வீழ்த்தி னார்கள்.

ஆட்டத்தின் கடை சுற்றில் கொல்கத்தா வெற்றிக்கு 21 ஓட்டத்தை தேவைப்பட்டது. ஸ்டோனிஸ் வீசிய அந்த சுற்றில் முதல் பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் சிக்சரும் 3-வது பந்தில் சிக்சரும் அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. 4-வது பந்தில் 2 ஓட்டத்தை எடுத்தார். இதனால் 2 பந்தில் 3 ஓட்டத்தை தேவைப்பட்டது.

கொல்கத்தா இந்த ஓட்டத்தில் எடுத்து வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 5-வது பந்தில் ரிங்கு சிங் ஆட்டம் இழந்தார். அவர் தூக்கி அடித்த பந்தை இவின் லீவிஸ் ஓடி வந்து இடது கையில் அபாரமாக பிடித்தார். ஒற்றை கையில் பிடித்த இந்த கேட்ச் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த கேட்சாக கருதப்படுகிறது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ஓட்டத்தை தேவைப்பட்டது. அந்த பந்தில் உமேஷ் யாதவை ஸ்டானிஸ் போல்டு செய்தார். இதனால் கொல்கத்தா 2 ஓட்டத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:

நாங்கள் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருப்போம். தோற்று விட்டதாகவே உணர்வு ஏற்பட்டது. இந்த பருவத்தில் இது போன்ற ஆட்டங்களை தவறவிட்டோம். பல ஆட்டங்கள் கடைசி ஓவர் வரை சென்றதில்லை. சில போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று இருக்கலாம். வெற்றியுடன முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிக்கெட்டின் சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய பெருமை உண்டு. கடைசியில் எங்களுக்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது.

கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார். அவர் புத்திசாலிதனமாக வீசினார். எங்களது மட்டையாட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »