Press "Enter" to skip to content

அடுத்த ஆண்டு டோனி வாக்கு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்- கவாஸ்கர்

ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை:

இந்த ஐ.பி.எல். பருவம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10 ஆட்டத்தில் தோற்றது.

கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டிக்கு பிறகுஅவர் அடுத்த ஐ.பி.எல். (2023) போட்டியிலும் ஆடுவேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக டோனி கூறும்போது

நிச்சயமாக அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன். எனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடாமல் விலகினால் நியாயமாக இருக்காது. சென்னையில் ஆடாமல் விடைபெற்றால் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு நன்றாக இருக்காது என்றார்.

டோனியின் இந்த முடிவை கவாஸ்கர் வரவேற்று உள்ளார். முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

அடுத்த ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்து இருப்பது சிறந்ததாகும். இதை ஒரு அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன்.

அவர் அந்த அணிக்கும், ஆதரவளித்தவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். டோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இதுவரை காணாத அளவிற்கு உச்சத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.

அடுத்த ஆண்டு அவர் விளையாடும் போட்டிகளில் ராஞ்சி மைதானமும் ஒன்றாக அமையலாம். 10 மைதானங்களில் விளையாடுவார். இதனால் வாக்கு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்.

இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »