Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022 – 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

10 அணிகள் பங்கேற்ற ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

மும்பை:

15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றது. மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

எனவே, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும் இருந்தன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறியது.

எனவே, புள்ளிகள் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்குள் 4-வது அணியாக நுழைந்தது.

நாளை மறுதினம் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

25ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

27-ம் தேதி நடைபெறும் அகமதாபாத்தில் நடைபெறும் 2வது தகுதிச்சுற்றில், முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

29ம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்றில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »