Press "Enter" to skip to content

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர்- ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதால் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ளது.

மும்பை:

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் டிம் டேவிட் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்கள் எடுத்து அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பேட்டி அளித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், டிம் டேவிட் அடித்த பந்து பேட்டில்
உரசியதாக நான் உணர்ந்தேன் என்றும், ஆனால் இறுதியில் நான் ரீவ்யூ கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்,  ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தனது தவறு காரணமாக அணிக்கு பிளே-ஆஃப் சுற்றில் இடம் கிடைக்கவில்லை என ரிஷப் உணர்கிறார்,  அவர் இன்னும் இளமையாக இருக்கிறார், கேப்டன்ஷிப் பற்றி கற்றுக்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஒரு சிறந்த கேப்டன், அவர் தனது அணியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை கடந்த பருவத்தில் நாங்கள் பார்த்தோம். சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கு உங்கள் வழியில் செல்லாது, நான் இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்து விட்டேன், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று பாண்டிங் கூறினார்.

ரிஷப் விளையாட்டை பின்னால் இருந்து நிறைய கற்றுக் கொள்வார் என்றும், அவர் சிறந்த மனம் கொண்டவர் என்றும் குறிப்பிட்ட பாண்டிங்,

இது போன்ற தடுமாற்றங்கள் விளையாட்டில் ஏற்படலாம், அப்போது உங்களை சந்தேகிக்காமல் இருப்பது முக்கியம், ரிஷப் வலுவாக திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »