Press "Enter" to skip to content

அர்ஜூன் டெண்டுல்கர் ஏன் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை? சச்சின் விளக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சச்சின் பதிலளித்து கூறியதாவது:

இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த பருவத்தில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும்.

உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன்.

ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது என தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »