Press "Enter" to skip to content

ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக 600 ஓட்டங்கள் – கே.எல். ராகுல் புதிய சாதனை

2022, 2021, 2020, 2018 ஆகிய ஆண்டுகளில் கே.எல். ராகுல் 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மும்பை:

நடைபெற்று வரும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. 

இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 சுற்றுகள் முடிவில் 4 மட்டையிலக்குடுக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. 208 ஓட்டங்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. 

அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த பருவத்தில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 பருவம்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் 626 ஓட்டங்கள், 2020-ஆம் ஆண்டில் 670 ஓட்டங்கள் மற்றும் 2018-ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019-ஆம் ஆண்டும் மட்டும் 593 ஓட்டங்கள் எடுத்து 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 600 ரன்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »