தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி

தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி

தொடர் மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. செங்குன்றம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் புழல் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியில் இருந்து தினந்தோறும் 85 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். ஏரியின் உயரம் 21.20 அடியாகும். ‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 4 […]

Read More
வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை: வங்க கடலில் கடந்த 21-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட […]

Read More
மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. […]

Read More
3 நகரங்களில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

3 நகரங்களில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

ஆமதாபாத், புனே, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சில வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது […]

Read More
மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் சட்டமன்ற தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச்செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்கு பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் […]

Read More
மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா

மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா

முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீரென ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி  தனது போக்குவரத்து துறை மந்திரி பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ம்மதா பானர்ஜிக்கு அனுப்பினார் மற்றும் ஒரு நகலை ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு இரவு 1.05 மணிக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். […]

Read More
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம், மோடி கேட்டறிந்தார்

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம், மோடி கேட்டறிந்தார்

‘நிவர்’ புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்வதாகவும் அப்போது உறுதி அளித்தார். சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய ‘நிவர்’ புயல் நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. கோர தாண்டவம் ஆடிய ‘நிவர்’ புயல், கடலூர், மரக்காணம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே கடலூர் […]

Read More
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 4-வது முறையாக 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். மழை நின்றவுடன் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் […]

Read More
முதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆட இங்கிலாந்து அணி 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுன்: தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. […]

Read More
சேலம் அருகே மோட்டார் மிதிவண்டி மீது அரசு பஸ் மோதல்: என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

சேலம் அருகே மோட்டார் மிதிவண்டி மீது அரசு பஸ் மோதல்: என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

சேலம் அருகே மோட்டார் மிதிவண்டி மீது அரசு பஸ் மோதியதில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலியானார்கள். அக்காளின் திருமணத்துக்கு என்ஜினீயர் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது. சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் வான்மதி. மகன் ஜெகதீஷ் (வயது 27), என்ஜினீயர். இந்தநிலையில் ஜெகதீஷின் அக்காள் வான்மதிக்கும், பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று காலை மல்லூர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. […]

Read More
பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது

பிரேசிலை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்தது

பிரேசில் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 37,692 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அங்கு […]

Read More
சுப்ரீம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சுப்ரீம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிப்பதாக சுப்ரீம் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி, 14 மற்றும் 15-ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க […]

Read More
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை – காவல் துறை

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை – காவல் துறை

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள தனது கட்சி தலைவர் வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்வதற்கு தான் புல்வாமா செல்ல காவல் துறை அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார். தனது இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் […]

Read More
தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா

தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா

தொலைக்காட்சிசீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை கெளசல்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சிசீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா.  மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் கௌசல்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Related Tags : […]

Read More
காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்

காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்

முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார். முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் […]

Read More
இயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்

இயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை படம் மூலம் அறிமுகமானவர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் […]

Read More
விமல் படத்திற்கு தடை – நீதிபதி அதிரடி உத்தரவு

விமல் படத்திற்கு தடை – நீதிபதி அதிரடி உத்தரவு

விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘ஊடகம் டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை ஊடகம் டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் […]

Read More
பிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்

பிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் பிரபல நடிகரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.  இந்நிலையில் பிரபல நடிகர் சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளை மேற்கொண்டார். சிகிச்சைகளுக்குப் பின் […]

Read More
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்

என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்

தகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “திரைப்படத்திற்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.  இந்தி பட […]

Read More
என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் – மிஷ்கின் வருத்தம்

என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் – மிஷ்கின் வருத்தம்

தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய திரையரங்கம் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய திரையரங்கம் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: “நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு […]

Read More
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த […]

Read More
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் ரசிகர்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா […]

Read More
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிநீதி மன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் […]

Read More
தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 64 […]

Read More
மொத்த பாதிப்பு 93 லட்சம், குணமடைந்தவர்கள் 87.18 லட்சம்- இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

மொத்த பாதிப்பு 93 லட்சம், குணமடைந்தவர்கள் 87.18 லட்சம்- இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டிய நிலையில், 87.18 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி புதிய பாதிப்புகள் கடந்த மாதம் வெகுவாக குறைந்த நிலையில், கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் […]

Read More
அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி காணொளி

அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி காணொளி

உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், இறந்துபோன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சம்பால்: உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஸ்ரெச்சர், அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய், சிறுமியின் உடலை கடித்தது.  இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் […]

Read More
அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- விமானிடை தேடும் பணி தீவிரம்

அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- விமானிடை தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். புதுடெல்லி: இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29கே ரக விமானத்தில் நேற்று விமானிடுகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொரு விமானிடை தேடி வருவதாகவும் […]

Read More
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம்- கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காவல் துறை

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம்- கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காவல் துறை

தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் இதற்காக […]

Read More
ஆஸ்திரேலியாவுடன் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி பந்து வீச்சு

ஆஸ்திரேலியாவுடன் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி பந்து வீச்சு

சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது. சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 சோதனை போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது. கொரோனா தொற்று பரவலால் […]

Read More
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து- 5 பேர் பலி

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து- 5 பேர் பலி

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் […]

Read More
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி

மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி

நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார். நாகர்கோவில்: நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ந் தேதி (அதாவது நேற்று) இருவருக்கும் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அச்சிட்டு தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்தனர். […]

Read More
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. புதுடெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி 20, 4 சோதனை போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்திய வீரர்களின் 14 நாள் கோரன்டைன் முடிவடைந்தது. யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை. இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு […]

Read More
பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 32 வயதான பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து என்னை […]

Read More
மரடோனா மறைவு:  விண்ணில் இணைந்து விளையாடுவோம் – பீலே உருக்கம்

மரடோனா மறைவு: விண்ணில் இணைந்து விளையாடுவோம் – பீலே உருக்கம்

கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான மரடோனா மறைவுக்கு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் என்று பீலே உருக்கமுடன் கூறினார். பியூனஸ் அயர்ஸ்: கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது. அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் […]

Read More
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

ரஷிய தலையீடு விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கினார் வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அரசு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜனாதிபதி டிரம்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மைக்கேல் பிளினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் செர்கெய் கிஸ்ல்யாக்கை தொடர்பு […]

Read More
நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கமல்ஹாசன்

நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கமல்ஹாசன்

நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.  அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும். […]

Read More
நவம்பர் 29ல் உருவாகக்கூடிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 29ல் உருவாகக்கூடிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 29-ம் தேதி உருவாகக்கூடிய புதிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடைமழை (கனமழை) மற்றும் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் […]

Read More
’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ – அரியானா முதல்மந்திரியை எச்சரிக்கும் பஞ்சாப் முதல்மந்திரி

’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ – அரியானா முதல்மந்திரியை எச்சரிக்கும் பஞ்சாப் முதல்மந்திரி

விவசாயிகளை தடுக்க நினைத்தீர்கள் என்றால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அரியானா முதல்மந்திரிக்கு பஞ்சாப் முதல்மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கத்தோடு பஞ்சாப்பில் இருந்து இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மார்க்கமாக […]

Read More
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், வலிமை படத்திற்காகஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் பகைவன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர். அஜித்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் வேகமாக […]

Read More
வித்தியாசமான தோற்றத்தில் ராஜ்கிரண்.. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

வித்தியாசமான தோற்றத்தில் ராஜ்கிரண்.. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

பிரபல நடிகராக இருக்கும் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழ் திரைப்படத்தில் “ராசாவே உன்ன நம்பி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரைப்படத்தில் களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ” என் ராசாவின் மனசிலே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.  தற்போது இவர் நீண்ட தாடியுடன் வித்தியாசமான பார்வைகில் பார்க்க ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி […]

Read More
விஷால், ஆர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

விஷால், ஆர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு […]

Read More
பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் […]

Read More
சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு

சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரைப்படத்தில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்தில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கீர்த்தி பணியாற்றியிருக்கிறார். சாந்தனுவும் கீர்த்தியும் இணைந்து புதிய மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார்கள். பிரபல நடன இயக்குனர் பிருந்தா இதை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதற்கு எங்க போற டீ என்று தலைப்பு வைத்து […]

Read More
உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே… பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்

உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே… பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இரண்டு பிரபல நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் பருவம் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்களை வைத்து நடக்கும் பிக்பாஸ் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் […]

Read More
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடைமழை (கனமழை) மற்றும் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் […]

Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை – பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை – பிரதமர் மோடி வலியுறுத்தல்

இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: நவம்பர் 26, 2008 அன்று, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவால் (எல்.இ.டி) பயிற்சியளிக்கப்பட்ட பத்து பயங்கரவாதிகள் மும்பையில் தாஜ் ஒட்டல், ஓபராய் ஒட்டல், லியோபோல்ட் கஃபே,நாரிமன் (சபாத்) மாளிகை, மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் தொடர் வண்டி நிலையம்  உள்ளிட்ட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்தினர். இதில் […]

Read More
‘ஜல்லிக்கட்டு’-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு

‘ஜல்லிக்கட்டு’-க்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு: செல்வராகவன் கணிப்பு

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு என்கிற மலையாள படம் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு மலையாள படமான ஜல்லிக்கட்டு தேர்வாகி உள்ளது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார்.  ஒரு மலை கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு வரப்பட்ட எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது. அந்த […]

Read More
நிவர் புயல் வலுவிழக்கிறது -6 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும்

நிவர் புயல் வலுவிழக்கிறது -6 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும்

நிவர் புயல் வலுவிழந்து வரும் நிலையில், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு உள்ளது. சென்னை: நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் அடைமழை (கனமழை) கொட்டித் தீர்த்தது. நிலப்பரப்பில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு அடைமழை (கனமழை) பெய்கிறது. இந்த புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Read More
மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது…. கதாநாயகன் யார் தெரியுமா?

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது…. கதாநாயகன் யார் தெரியுமா?

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் இளம் நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி உள்பட 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர்.  இந்நிலையில், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் […]

Read More
திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி

திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி

திருமணத்துக்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை சுவாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது.  தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், […]

Read More