தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு ? – பெற்றோர் குற்றச்சாட்டு

தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு ? – பெற்றோர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போடப்பட்ட கைக்குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தைச்சேர்ந்த லாரி டிரைவர் சீரஞ்சிவி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு லித்தேஷ் என்ற 5 மாத குழந்தை இருந்தது. லித்தேஷூக்கு நேற்று ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடியற்காலை குழந்தை லித்தேஷ் திடீரென மூச்சு பேச்சுயின்றி காணப்பட்டதால் உடனடியாக பெற்றோர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து […]

Read More
‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்

‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. அதன்பின் வேகமெடுத்த இந்த வைரஸ் தற்போதுவரை 1,355 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை 60,015 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவைச் சேர்ந்தவர்கள் 48,206 பேர் ஆவர். ஹூபே மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் 242 பேர் கொரோனாவுக்கு உயிரி‌ழந்திருப்பது உலக நாடுகளிடையே அச்சத்தை ‌ஏற்படுத்தியுள்ளது. சீனாவில்‌ கொரோ‌னா வைரஸ் தாக்கம் நாளுக்கு‌நாள் அதி‌கரித்து வரும் நி‌லையில் […]

Read More
ஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்

ஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் வெறும் பரிந்துரை மட்டுமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன்,‌ நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பியது. இந்தத் தீர்மானம் மீது […]

Read More
காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை

காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை

நெல்லையில் சாலைகளில் திரியும் ஆடுகளை கார்களில் வந்து கடத்திச் சென்ற நூதன கொள்ளை கும்பலை, காவல்துறை காத்திருந்து கைது செய்துள்ளது. நெல்லை மாநகரப் பகுதியான அருகன்குளம் சேந்திமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே ஆடுகள் திருட்டு போவது அதிகரித்தது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை 40க்கும் அதிகமான ஆடுகள் காணாமல் போயின. இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் ஆடுகள் திருடுவது தொடர்கதையாக நீடித்தது. இந்நிலையில், அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி […]

Read More
கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு அருகே கம்பமலை என்ற கிராமத்தில் 7 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு நுழைந்ததாக, அம்மாநில நக்சல் தடுப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. மலைவாழ் மக்களை சந்தித்த மாவோயிஸ்ட்டுகள், அரசுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சூரியமுடி மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது. இலவசங்கள் அறிவிப்பு: சமூக முன்னேற்றத்திற்கா ? வாக்கு அரசியலுக்கா ? அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி […]

Read More
மன நலம் குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு !

மன நலம் குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு !

  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க, அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் “கணவரை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். 26 வயதாகும் எனது இராண்டாவது மகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது நானும் அவளும் மட்டுமே வீட்டில் […]

Read More
‘சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்க மட்டும் ஆர்வமா ?’ – அரசியல்வாதிகளை சாடிய உயர்நீதிமன்றம்

‘சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்க மட்டும் ஆர்வமா ?’ – அரசியல்வாதிகளை சாடிய உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘ஒரு கேப்டனுக்குக் கூட சொல்ல மாட்டீங்களா?’ – ஆர்சிபி செயலால் அதிர்ச்சி ஆன விராட் கோலி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் […]

Read More
தக்கலையா? தக்காளியா? – இணையத்தில் பரவும் அரசு பேருந்து பயணச்சீட்டு

தக்கலையா? தக்காளியா? – இணையத்தில் பரவும் அரசு பேருந்து பயணச்சீட்டு

கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னணு பயணசீட்டில் ஊர் பெயர் “தக்கலை” என்பதற்கு பதிலாக “தக்காளி” என குறிப்பிடபட்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மதுரை மாவட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனை போடி கிளையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் காலை அரசுப் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், மில்டன் என்பவர் இந்த பேருந்தில் மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தில் அவருக்கு வழங்கப்பட்ட மின்னணு பயண சீட்டில் “தக்கலை” என்ற […]

Read More
”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை

”போலி செய்திகளை தடுக்க சிறப்பு டீம்” – களத்தில் இறங்கிய சென்னை காவல்துறை

சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எவ்வளவோ போலி செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. பழைய புகைப்படங்கள், என்றோ நடந்த செய்திகள் என தனிமனிதர்களின் கட்டுக்கதைகளும் வைரலாகி வருகின்றன. இதனால் மக்களிடையே தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இந்த தவறான தகவல்களால் வன்முறைகளும், கும்பல் தாக்குதல்களும் அரங்கேறிவிடுகின்றன. அதற்கு சமீபத்தில் நிறைய சம்பவங்கள் உதாரணமாக அமைந்துவிட்டன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகள் […]

Read More
“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம்

“நானும் கீழ் மகன் (ரவுடி)தான்” – கத்தியை காட்டி மாமூல் கேட்ட கீழ் மகன் (ரவுடி)க்கு நேர்ந்த சோகம்

வானூர் அருகே காய்கறி வியாபாரியிடம் மாமூல் கேட்ட ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ராஜ்குமார். இவரின் கூட்டாளியான, நாவற்குளத்தை சேர்ந்த உயதயராஜ்(26) மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. “குற்றப்பின்னணி உடையவர்கள்தான் வேட்பாளர்களா?” – அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்  இந்நிலையில், கடந்த 11ந் தேதி வானுார் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சுரேஷ் […]

Read More
காதலிக்க மறுத்ததால் பெண் கொலை – இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்ததால் பெண் கொலை – இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் நல்லிக் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை(32). இவர் அதேப்பகுதியை சேர்ந்த சுப்பிரிகா(24) என்ற பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் தங்கதுரையின் காதலை சுப்பிரிகா ஏற்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து சுப்பிரிகாவிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால், காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் […]

Read More
ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் – குவியும் பாராட்டு

ஆட்டோவில் விட்டுச்சென்ற நகை, பணம்.. நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர் – குவியும் பாராட்டு

மதுரையில் ஆட்டோவில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 10ம் தேதி காளவாசல் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். பயணம் முடிந்து ஆட்டோவிலிருந்து இறங்கிய ராஜலட்சுமி தன் கையில் வைத்திருந்த கைப்பையை மறந்து ஆட்டோவிலேயே விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து ஆட்டோவில் இருந்த பையை கண்ட ஓட்டுநர் ஷேக் மீரான் பையை திறந்து பார்த்துள்ளார். ‘வன்முறையைத் […]

Read More
‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. காவல்துறையில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி

‘கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்.. காவல்துறையில் தஞ்சம்’ வாழ்க்கையை தேடும் காதல் ஜோடி

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி மாலையும், கழுத்துமாக காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(25). சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினிதா(24). இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு  […]

Read More
‘வன்முறையைத் தூண்டும் பேச்சு’ – 2 ஆண்டுகளுக்குப் பின் சீமான் மீது வழக்குப்பதிவு

‘வன்முறையைத் தூண்டும் பேச்சு’ – 2 ஆண்டுகளுக்குப் பின் சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   காமராஜர் நினைவு நாளையொட்டி 2018ஆம் ஆண்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சீமான் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இருபிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   “காப்புரிமையை நிரந்தரமாக […]

Read More
செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு

செவிலியர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு: இருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு

நெல்லையில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 67 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Read More
அரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ? – வெளியான தகவல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் ? – வெளியான தகவல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிய சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் காலை உணவுத்திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு என தகவலில் தெரியவந்துள்ளது. ஷீலா தீட்சித்தை குறைகூறிய பி.சி.சாக்கோ.. – காங்கிரஸுக்குள் எழுந்த கடும் எதிர்ப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM Source: […]

Read More
கும்பகோணத்தில் இருக்கும் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருக்கும் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு

கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட சீனிவாச பெருமாள் சிலை திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கும்பகோணம் அருகே திருபுறம்பியம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒன்று உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை ஜெயலட்சுமி என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிகளை நிறைவு செய்த ஜெயலட்சுமி கோயிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இன்று மாலை பூஜை செய்வதற்காக ஜெயலட்சுமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போழுது […]

Read More
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ‘உதயசூரியன் வடிவமா?’ – பாஜகவினர் எதிர்ப்பால் தோண்டப்பட்ட புதுச் சாலை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ‘உதயசூரியன் வடிவமா?’ – பாஜகவினர் எதிர்ப்பால் தோண்டப்பட்ட புதுச் சாலை

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை, உதயசூரியன் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தச் சாலையை தோண்டிப் போட்டுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெள்ளை மற்றும் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் மேலசித்திரை வீதி – வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் கடந்த 25 நாட்களாக […]

Read More
‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

‘பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விசாரணைக்காக வருமானவரி புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறையினர் சரமாரியான கேள்விகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக அதனை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், அவர்களுக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி […]

Read More
பண இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

பண இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

புதுச்சேரியில் பிரபல வங்கியின் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு கும்பல், புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடி வந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து கோடி கணக்கிலான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிப். 16ம் தேதி டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்  இந்நிலையில் புதுச்சேரியில் மீண்டும் ஏஎடிம் கொள்ளை […]

Read More
உயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

உயிர் பிரியும் போதும் மாணவிகளை பத்திரப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளை தான் இறக்கும் நிலையிலும் பத்திரமாக அனுப்பி வைத்த ஆட்டோ ஓட்டுநரை நினைத்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம். இவர் காலையும், மாலையும் பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தைபோல அன்பு காட்டி வந்த இவரை மாணவிகள் ‘ஆட்டோ மாமா’ என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை ராமலிங்கம் மாணவிகளை பள்ளியிலிருந்து ஆட்டோவில் அழைத்து […]

Read More
பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை

பிரான்சிலிருந்து திரும்பிய மகனை சொத்து தகராறில் அடித்துக் கொன்ற தந்தை

விடுமுறைக்காக பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ரஞ்சித் பிரெஞ்சு குடியுரிமை பெற்று, அவரது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி விடுமுறைக்காக ரஞ்சித் தனியாக புதுச்சேரி வந்துள்ளார். பிரான்சிலிருந்து வந்ததில் இருந்தே […]

Read More
சாலையோரம் நின்ற சிறுவர்கள் : தேரை நிறுத்தி இனிப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

சாலையோரம் நின்ற சிறுவர்கள் : தேரை நிறுத்தி இனிப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுவர்களுக்காக காரை நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் முதலமைச்சர் பழனிசாமி தனது காரில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது சாலையோரம் நிற்கும் சிறுவர்-சிறுமிகள் அவரை பார்த்து கை அசைத்து வரவேற்கின்றனர். அவர்களுடன் சிலர் சேர்ந்து நிற்கின்றனர். இதைக்கண்ட முதலமைச்சர் தனது காரை சாலையோரம் நிறுத்தச் சொல்லி, அந்தச் சிறுவர்களை அருகே அழைக்கிறார். கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ? அத்துடன் அவர்களுக்கு சாக்லெட்டுகளையும் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து […]

Read More
நம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) – அதிரடி காட்டும் சென்னை காவல்துறை!

நம்பர் பிளேட்டுகளை இரவிலும் படமெடுக்கும் துல்லிய ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) – அதிரடி காட்டும் சென்னை காவல்துறை!

சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் சிறிய தெருக்கள்கூட கேமராவின் கண்காணிப்பில் இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் அதிநவீன கேமராக்கள் ( Automatic Number Plate Recognition) சென்னையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த அதிநவீன கேமராக்கள் சென்னையின் சில […]

Read More
#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!

#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கெஜ்ரிவால் நம்பிக்கை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும் என பாரதிய ஜனதா கருத்து. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது அதிபர் மாளிகை. வருகிற 24-ஆம் தேதி மனைவியுடன் பயணம் மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு. பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று தவறாமல் அவையில் ஆஜராக உத்தரவு. முக்கிய […]

Read More
குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் – விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் – விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

தாயே குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தது போலீசார் விசாரணையில் திடீர் திருப்பமாக தெரியவந்துள்ளது. அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் அரசுப் பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் மற்றும் சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன் விகாஸ் கடந்த 5ஆம் தேதி மாலை வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், குழந்தை இறப்பில் மர்மம் உள்ளதாகவும் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாய் சுஷ்மிதாவும் தாத்தா […]

Read More
மகனை இழந்த சோகத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர் – விமானத்தில் சென்னை வந்த இருதயம்..!

மகனை இழந்த சோகத்திலும் மனிதநேயம் காட்டிய பெற்றோர் – விமானத்தில் சென்னை வந்த இருதயம்..!

சேலம் அருகே மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இருதயம் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விஜயகுமார் – ராணி தம்பதியின் மகன் சுரேந்திரன். இவர் கடந்த 8ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலை பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறினர். அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்த […]

Read More
பணியாளர் காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய ஆணையத்தின் உறுப்பினர்…!

பணியாளர் காலில் விழுந்து ஆசி வாங்கிய தேசிய ஆணையத்தின் உறுப்பினர்…!

தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி. இவர் துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக்கை வேண்டும்’ : ‘யு19’ இந்திய அணி மேலாளர் ஐசிசி-க்கு வலியுறுத்தல்  துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து தேசியத் துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் ஆய்வு மேற்கொண்டார். மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட […]

Read More
எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

எழுத்து தேர்வில் முறைகேடு : கையெழுத்து மூலம் சிக்கிய சிஎஸ்எப் காவலர் பணி நீக்கம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த சிஎஸ்எப் காவலர் எழுத்து தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதனை பாதுகாக்க மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அசாமை சேர்ந்த ஒருவர் இங்கு பாதுகாப்பு பணியில் காவலராக இருந்து வந்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இசை வெளியீடு […]

Read More
இனி பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை…!

இனி பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை…!

பத்திரப் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் தரும் ஒப்புகை சீட்டை வைத்து தாலுகா அலுவலகத்தை அணுகினால் பட்டா […]

Read More
வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews

வரலாறு படைத்த வங்கதேசம் முதல் சீன அதிருபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் வரை..! #TopNews

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அரசியல் கட்சிகள் வரவேற்பு. விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி. 23 அரசு வேலைகளை 4 கோடி ரூபாய்க்கு விற்ற இடைத்தரகர் ஜெயக்குமார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலம் அதே ஸ்டைல்; அதே வேகம் – சச்சின் விளையாடிய ஒரு ஓவர்!  சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக அதிகரிப்பு. வைரஸை […]

Read More
‘ஆணாக வாழ விடுங்கள்’ : அடம்பிடிக்கும் திருமணமான இளம் பெண்.. விரக்தியில் தாக்கிய தந்தை

‘ஆணாக வாழ விடுங்கள்’ : அடம்பிடிக்கும் திருமணமான இளம் பெண்.. விரக்தியில் தாக்கிய தந்தை

திருநம்பியாக உள்ள தன்னை தனது தந்தை கொலை செய்ய முயற்சிப்பதாக இளம் பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தந்தை தாக்கியதால் காயமடைந்த அவர் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்மாடசாமி. இவரது மகள் பொன்மாரி செல்வி (25). இவர் செவிலியர் படிப்பு முடித்துவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண் தன்மையுடன் இருந்த பொன்மாரி செல்வி, ஆண்கள் போன்று தலைமுடி வைத்துக் […]

Read More
‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கப்படும்’ : முதல்வர் அறிவிப்பு

‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கப்படும்’ : முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி தராது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் !  சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு இன்று அடிக்கால் நாட்டி பேசிய அவர் “விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் அதிமுக அரசு அனுமதியளிக்காது. முக்கியமாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு […]

Read More
மதுபோதையில் 8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற தந்தை

மதுபோதையில் 8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற தந்தை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது ‌8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி – லால்குடியைச் சேர்ந்த ராஜதுரை, தனது மனைவிகள் சித்ரா, பேச்சியம்மாள் ஆகியோருடன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது குடிப்பழக்கத்தால் அதிருப்தியடைந்த 2 வது மனைவி பேச்சியம்மாள், 8 மாத பெண் குழந்தையை கணவரிடமே விட்டுவிட்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார். விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற […]

Read More
விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்

விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்

திருவேற்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கியவரை மீட்ட தீயணைப்பு துறையினர் அவரை உயிர் பிழைக்க வைக்க போராடும் காட்சி பார்ப்போரை நெகிழ வைக்கிறது. திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிக்காக மதுரவாயல், சீமாத்தம்மன் நகர், பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா(37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் […]

Read More
தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் திட்டம்?

தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் – ரஜினியின் திட்டம்?

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்த நடிகர்‌ ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்றும் தெரிவித்து இருந்தார். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆனதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதாலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், வருகிற ஏ‌ப்ரல் மாதம் தமிழ்ப் […]

Read More
விடுமுறைநாளில் களைகட்டிய மதுபான விற்பனை: காத்திருந்து வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்

விடுமுறைநாளில் களைகட்டிய மதுபான விற்பனை: காத்திருந்து வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்

மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கொரட்டூரில் காவல்நிலையம் அருகே மதுபான கடையில் விற்பனை களைகட்டியது. நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிச் சென்றனர். வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது விற்கக்கூடாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பல பார்களில் நேற்று தங்கு தடையின்றி மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, கொரட்டூர் […]

Read More
உச்சக் கட்ட போதை… உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் !

உச்சக் கட்ட போதை… உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் !

குமுளி பேருந்து நிலையம் அருகே துர்நாற்றம் வீசும் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகனின் கோலம் காண்போரை முகம் சுழிக்க வைப்பதாய் இருந்தது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி பேருந்து நிலையம் தற்போது குமுளி அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அளவுக்கு மீறிய போதையில் வருவோர் அடிக்கடி அப்பகுதியில் விழுந்து கிடப்பது வாடிக்கையாகியுள்ளது.          வங்கதேச புலியை வேட்டையாடுமா ஜூனியர் இந்திய அணி ?  அந்த வரிசையில் […]

Read More
டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு முதல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை… #TodayTopNews

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு முதல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை… #TodayTopNews

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 61.46% வாக்குகள் பதிவு. வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் தகவல். குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்தது சிபிசிஐடி. வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் உறுதி. பெற்றோர்கள் கோரிக்கையை […]

Read More
வறட்சியை நோக்கி வேகமாகச் செல்லும் முதுமலை புலிகள் காப்பகம்

வறட்சியை நோக்கி வேகமாகச் செல்லும் முதுமலை புலிகள் காப்பகம்

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வனப்பகுதி வறட்சியை நோக்கி வேகமாகச் செல்கிறது. இதனால் காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு முதுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி தீயில் கருகி சாம்பலானது. இந்த ஆண்டு அதேபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை […]

Read More
‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ – ஆர்.பி.உதயகுமார்

‘திமுக போட்ட பொய் வழக்குகளால் ஜெயலலிதா இறந்தார்’ – ஆர்.பி.உதயகுமார்

திமுக போட்ட பொய் வழக்குகளால்தான் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்ததினம் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து மதுரை உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், ”திமுக போட்ட பொய் வழக்குகளால்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஆனால் தற்போது அந்த திமுகவுடன் கூட்டணி அமைத்து […]

Read More
கடத்தல் மணல் தடுத்து நிறுத்தம்: டிராக்டரை ஏற்றி போலீசாரை கொலை செய்ய முயற்சி

கடத்தல் மணல் தடுத்து நிறுத்தம்: டிராக்டரை ஏற்றி போலீசாரை கொலை செய்ய முயற்சி

கரூர் குளித்தலை அருகே கடத்தல் மணலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை முயற்சி செய்ததாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாலவிடுதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட சில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதில் கடத்தல் மணல் இருந்துள்ளது. உடனடியாக டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உதவி ஆய்வாளர் […]

Read More
கொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த காவல் துறையினர்..!

கொடைக்கானலில் பார்ட்டி- போதையில் ஆட்டம், பாட்டம்; 200 பேரை மடக்கி பிடித்த காவல் துறையினர்..!

கொடைக்கானலில் போதைப்பொருட்களை பயன்படுத்தி கேளிக்கையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாவுக்கான இடங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். வெற்றி பெறுமா இந்தியா ? 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து..! இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் 200-க்கும் மேற்பட்டோர், கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், போதையுடன் கூடிய […]

Read More
நள்ளிரவில் கடலில் மோதிரத்தை மாற்ற ஆசைப்பட்ட தம்பதி – சோகத்தில் முடிந்த திருமண நாள் கொண்டாட்டம்

நள்ளிரவில் கடலில் மோதிரத்தை மாற்ற ஆசைப்பட்ட தம்பதி – சோகத்தில் முடிந்த திருமண நாள் கொண்டாட்டம்

திருமண நாளை தம்பதியினர் கொண்டாட சென்ற நிலையில், கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்-வினி சைலா(27) தம்பதி. இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. வினி சைலா, வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கணவர் விக்னேஷ், ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இவர்களின் 2-வது […]

Read More
வாக்கி டாக்கி முறைகேடு – காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

வாக்கி டாக்கி முறைகேடு – காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்துறையினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து, 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். டிசம்பரில் ரன்பீர் கபூர் – அலியா பட் திருமணம்?  அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை […]

Read More
பிப். 14ம் தேதி தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்

பிப். 14ம் தேதி தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல்

வரும் 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டம் தொடங்கும் அன்றே நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் […]

Read More
இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!

இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்துமுறை, கிறிஸ்தவ முறை, மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. படிக்கச் சென்ற இடத்தில் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாக நடந்தேறியது. திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல்-தமிழரசி தம்பதியரின் மகன் எஸ்.தரணி. M.Tech படித்துள்ள இவர் சுவீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு எம்எஸ் படிக்க சென்றபோது, சுவீடன் நாட்டை சேர்ந்த […]

Read More
7 பேரை விடுவிக்க ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்: மத்திய அரசு தகவல்

7 பேரை விடுவிக்க ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்: மத்திய அரசு தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில், கடந்த […]

Read More
சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில், சிறுவனிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 27 யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிலுள்ள விநாயகர் கோயிலில் வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா ஆகியவற்றிற்கு பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்க கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலணிகளை பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற கூறினார். 21 ஆண்டுகளுக்கு முன்பு […]

Read More
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விலை உயர்வு அமல்

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விலை உயர்வு அமல்

தமிழக டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஜூனியர் உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: இந்தியா – வங்கதேசம் மோதல் இந்நிலையில் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. […]

Read More