டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக மும்பையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர், சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதுடெல்லி: டெல்லியில் நேற்று குடியரசு தினத்தில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறைகள் இடம்பெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சட்ட மாணவர் அஷீஷ் ராய், சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியில் சில சமூகவிரோத சக்திகள் வன்முறையில் ஈடுபட்டன. பொதுச்சொத்துகளுக்கு […]
