வேலூர்: சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இன்றைய சூழலில் அசைவ உணவு மனிதனின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு ஊரிலும் ஆடு, மாடு அறுக்கும் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாடுகள் அறுக்கும் கூடங்கள் பெரும்பாலும் வெட்டவெளியில் எல்லா இடங்களிலும் அமைந்துள்ளன. இவ்வாறு இயங்கும் இறைச்சி கூடங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. […]
