Press "Enter" to skip to content

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு…

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, இன்று அவையில் எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 16 கட்சிகளின் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்தியப் புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தின்முன் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மக்களவையும் மாநிலங்களவையும் தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே CBI, அமலாக்கத்துறையினரின் ரெய்டு தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர், ராகுல்காந்தி லண்டனில் ஜனநாயகம் குறித்துப் பேசியது தேசத்திற்கே அவமானம் என குறிப்பிட்டனர். இந்திய மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஆளுங்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து குரலெழுப்பினர்.

இதையும் படிக்க : ஈ.பி.எஸ். 

உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு…தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

இதையடுத்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக பதிலளிக்குமாறும், பிபிசி பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் கேள்வியெழுப்பினார். இதையடுத்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இருப்பினும், அதானி விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லிகார்ஜூன கார்கே, சர்வாதிகாரி போல் நாட்டை ஆட்சி செய்து, ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடி பேசி வருவதாக குற்றம் சாட்டினார். அவரின் ஆட்சியில் சட்டமும் இல்லை ஜனநாயகமும் இல்லை எனவும் சாடினார்.

இந்நிலையில் இரு அவைகளும் 2 மணிக்கு மீண்டும் தொடர்ந்த நிலையில், இதே பிரச்சனை எதிரொலித்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »