Press "Enter" to skip to content

தும்பவனத்து அம்மனுக்கு மாவடிசேவை உற்சவம்

மாவடிசேவை உற்சவத்தில் தும்பவனத்தம்மன்.

தும்பவனத்தம்மன் மாவடி சேவை விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் சிவகாமி சமேத நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலுள்ள தும்பவனத்தம்மனுக்கு மாவடி சேவை உற்சவம் நடைபெற்றது. இதில், அம்மன் சிவனை இறுகிபற்று காட்சியோடு, மாவிலை அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, படவேட்டம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி, முருகர் மயில் மேல் அமர்ந்தவாறும், படவேட்டம்மனுக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அதன்பிறகு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. மேலும், உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் கோயிலில், சிவன்- பார்வதி அபிஷேகம் செய்வதுபோல், பார்வதி முருகன் உடன் அமர்ந்திருக்கும் கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதுபோல், காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாக்களில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Source: dinamani