Press "Enter" to skip to content

உங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுகிறதா? ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன? 

உலக சுகாதார நிறுவனம் அக்டாபர் 20-ஐ உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில் இன்று உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’ எனப்படும் ஆஸ்டியோபோராசிஸ் நோயாகும். நூறு கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றவர் வரிசையில் உள்ளனர். 

எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புப்புரை நோயைக் கண்டறிதல், தடுத்தல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. தங்கள் எலும்புகளையும், தசைகளையும் பாதுகாக்க மக்களையும், தங்கள் சமுதாய மக்களின் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஊக்கப்படுத்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

தெருவில் நடந்து செல்லும்போது கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன். விழக்கூட இல்ல, லேசா சாஞ்சுட்டேன். பாம் தேய்ச்சுட்டுப் படுத்துடலாம்னு பார்த்தா, வலி தாங்க முடியல. ஹாஸ்பிடல் போனா, ‘கால் எலும்பு உடைஞ்சுடுச்சு’னு சொன்னாங்க. ‘சும்மா ஸ்லிப் ஆகி விழுந்ததுக்கு எலும்பு உடைஞ்சுருச்சா?’னு அதிர்ச்சியா கேட்டா, ‘கீழ விழக்கூட வேணாம். தும்மும்போதுகூட எலும்பு முறிஞ்சுடலாமாம் ஆஸ்டியோபோரோசிஸ் வந்தவர்களுக்கு.

”பொதுவாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். எலும்புத் திசுக்கள் சிதைடைவது எலும்புப்புரை நோயின் இயல்பு. எலும்புகள் உடையும்தன்மையும் பலவீனமும் அடையும். இது முதுகெலும்பு, இடுப்பெலும்பு, மணிக்கட்டு ஆகிய எலும்புகள் முறிவடையும் நிலை ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேல் ஆண்களை விடப் பெண்களுக்கு எலும்புப்புரை நோய் உண்டாகும் ஆபத்து அதிகம். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையைப் பாதிக்கலாம்.

எலும்புகள் அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பு அரிப்பு’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம், அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

உடலில் வைட்டமின்-டி நார்மல் லெவல் 30-க்கு மேல் இருக்கவேண்டும். இதில் குறைபாடு ஏற்படும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகிறது. 30 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். 40 வயதுக்கு மேல் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாட்டால் சிலருக்கு எலும்புத் தேய்மானம் தீவிரமடைந்து, எலும்பு மிகவும் பலவீனமாகி, சிறு அடிபட்டாலும், ஏன்… உட்கார்ந்து எழும்போதுகூட நொறுங்கிவிடக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இது தண்டுவடத்தைத்தான் அதிகமாகப் பாதிக்கும். அடுத்ததாக, இரண்டு இடுப்பு மூட்டுகளும் இதன் இலக்கு. சோர்வு, களைப்பு, சதை வலி ஏற்படுத்தும், எலும்பு வலிகளைத் தரும் இந்நோயை ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைப்பதுண்டு. அந்தளவுக்கு, நாம் அறியாமலேயே நம்மைத் தாக்கும்.

‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்பு நுண்துளை நோய்தான், இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகமாகத் தாக்கி, நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது. ஆண்களைவிட, பெண்களையே அதிகமாக இந்நோய் குறிவைத்து தாக்குவதேன். இதன் விளைவுகள் என்ன? நோயை எப்படிக் கண்டறியலாம்? சிகிச்சை முறைகள் எப்படி? இதை சரிப்படுத்தும் உணவுமுறை, உடற்பயிற்சிகள் என்னென்ன? மேலும் ஜாதக ரீதியாக இந்த நோய் வருவதற்கான கிரகநிலை என்ன என்பதையும் பார்ப்போம்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? பெண்களுக்கு ஏன் அதிக பாதிப்பு?

பெண்களைப் பொறுத்தவரை, எலும்புகளின் உறுதிக்கு அவர்களின் பாலின ஹார்மோனான எஸ்ட்ரோஜென் பங்கு இன்றியமையாதது. ஆனால், 40 வயதுக்கு மேல் அல்லது மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும்போதும், அந்த நிலையை அடையும்போதும் இந்த ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்து, பிறகு நின்றுவிடும். இதனால், எலும்புக்கான சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே, அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எளிதில் இலக்காகிறார்கள். இது முதன்மைக் காரணம். இதேபோலவே மெனோபாஸ் கட்டத்துக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களுக்கும் இந்த ஹார்மோன் சுரப்பு நிற்பதால், அவர்களுக்கும் எலும்புத் தேய்மானம் ஏற்படலாம்.

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின்-டி, வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கால்சிய குறைபாடும் ஏற்படும். இப்படி கால்சியம் சத்துக் குறைவதற்கான சூழ்நிலைகள், ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக இருப்பதால், அவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காப்பாற்றும் காலை வெயில்

“குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை பெண்கள் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின்-டி சத்துள்ள உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கக்காக தினமும் காலை வெயிலில் 15 நிமிடங்கள் அதிகாலை வெயிலில் இருப்பது நல்லது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றால், இந்தச் சத்துக்கான மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். எலும்பின் திறத்தன்மையை அறிந்துகொள்ளும் பரிசோதனையை மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு தடவை செய்துகொள்ள வேண்டும்” 

உணவே மருந்து

“கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், இதயத் துடிப்புக்கும், தசை வலுவுக்கும், ரத்தக்கொதிப்பு சீராக இருக்கவும், ரத்த நாளங்களில் புண் ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் தேவை என்பது பலரும் அறியாதது. பெண்களுக்கு மாதவிடாய் துவக்கம் முதல், முடியும் வரை கூடுதல் தேவையுள்ள மிகமுக்கிய உணவுக்கூறு, கால்சியம். தைராய்டு குறைவு இருந்தாலோ, பாரா தைராய்டு இருந்தாலோ, கால்சியக் குறைவும், அதைத் தொடரும் முதுகு மற்றும் மூட்டு வலிகளும் வரலாம்.

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்தான் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். இதற்குக் காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். 

உணவில் பன்னீர் சேர்க்கை

பன்னீரில் செய்த உணவு வகைகளில் கால்சியம், மெக்னீஷியம், ப்ளோரைட், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் பலமாகவும் உதவுவதாக அறிவியல் செய்திகள் கூறுகின்றன. கால்சியம் எனும் சுண்ணாம்பு சத்தோடு மெக்னீஷியம், பொட்டாஷியம் ப்ளோரைட் போன்றவை சரி விகிதத்தில் இருந்தால்தான் உறுதியான எலும்புகள் அமையும் என்பது கூடுதல் தகவலாகும்.

தாம்பூலம் எனும் வெற்றிலை பாக்கு

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்தச் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்கக் கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படிப் பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைப்படுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இப்போது வயதானவர்களுக்கு இருக்கக் கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டுவிட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தைப் பரிசாக தந்து விடுகிறது.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்குக் காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. 

ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கான ஜோதிட காரணங்கள்

எலும்புக்குக் காரகனாக சூரியனும் எலும்பிலுள்ள மஜ்ஜைக்கு காரணமாக செவ்வாய் இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கும் மந்தன் எனப்படும் சனைஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். மேலும், ஆயுர்வேதத்தில் எலும்புபுரை நோயை வாத நோயாகவே குறிப்பிடுகின்றனர். எனவே வாத கிரகங்களான சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை  ஏற்படுத்துகின்றது. மேலும், சூரியன் மற்றும் செவ்வாயும் சனியுடன் அசுப சேர்க்கை பெறுவதும் கூட எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு சம்மந்தமான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையைக் கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான சுக்ரன் (ரிஷபம்), புதன் (கன்னி) மற்றும் சனி (மகரம்) ஆகியவற்றின் தொடர்பு எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணாம்பு சத்து குறைபாடு எனும் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்குக் காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் (காரக கிரகம் சூரியன்) இரும்புச் சத்து (காரக கிரகம் செவ்வாய்) ஆகியவற்னின் நிலைப்பாடும் இந்த நோயைத் தெரிவிக்கிறது.  மேலும் சர்க்கரை சத்து அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்ரன் ஆகும்.

உடம்பில் வைட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைபாடு உள்ளவர்களைச் சூரிய வெளிச்சத்தில் நிற்கச் சொல்லுவது அனைவரும் அறிந்ததே.

சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்த்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தப்படுவது.

காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.

எலும்பிற்குக் காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்புகொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்புபெறும் போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி, செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

வர்க சக்கரங்களில் நோயைக் குறிக்கும் சஸ்தாம்ஸத்தில் லக்னத்திற்கு ஆறில் சனி நிற்பது மற்றும் ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் நிற்பது.

ஆஸ்டியோபோராஸிஸ் நோய்க்கான கிரஹ அமைப்புகள்

1. சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது.

2. சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது.

3. சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது.

4. குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது.

5. சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது.

6. சனியும் ராகுவும் இரண்டு அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது.

7. சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6-ம் வீட்டில் நிற்பது.

9. சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது.

10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது.  

11. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரஹங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது.

பரிகாரங்கள்

சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனிக்கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் எண்ணை (நல்லெண்ணெய்) தேய்த்துக் குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணெய் சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது. 

சூரியனுக்கும் சனைஸ்வரருக்கும் சிவ வழிபாடே சிறந்ததாகும். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்குவது எலும்பு புரை நோய் வருவதைத் தடுக்கும். இந்தக் கோயிலில் திருஞான சம்மந்தர் எலும்பிலிருந்து இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்தது குறிப்பிட தக்கதாகும்.

மார்க்கண்டேயனுக்காக திருக்கடையூரில் எமனை வதம் செய்து சாம்பலாக்கி திருச்சி அருகில் உள்ள திருபைஞ்சிலி எனும் தலத்தில் அஸ்தியிலிருந்து (எலும்புச் சாம்பல்) எமனை மீண்டும் உயிர்ப்பித்ததால் திரு பைஞசிலி ஞீலிவன நாதர் திருக்கோயிலும் சிறந்த பரிகாரத்தலமாகும். பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்தி எலும்பு மாலை அணிந்த பைரவ வழிபாடும் சிறந்த பலனளிக்கும்.

சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குவது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது.  

வாத பித்த கப தோஷங்களை சமன் செய்யும் திரிபலா சூரணம், யோகராஜ குக்குலு, வாத ராக்ஷஷ ரஸம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது.

மேலும் ஆயுர்வேத மருந்து மற்றும் சனியின் காரகம் பெற்ற ப்ரபஞ்சன விமர்தன தைலம், கொடன்சுகாதி தைலம், நாராயணாதி தைலம், கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை மிதமான சூட்டில் தேய்த்து விடுவதும் சிறந்த பலனளிக்கும்.

சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றுவது, முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி (செருப்பு, குடை கைத்தடி) செய்வது, திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனுர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுர் ஆகிய  சனி ஸ்தலங்களுக்கு அவ்வப்போது சென்று வருவது.

பன்னீர் பாலை திரித்துச் செய்யப்படும் பொருளாகும். பாலிருந்து வந்தாலும் பால் திரிந்துவிடுவதாலும் அதில் கால்ஷியம் எனும் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் இருப்பதால் சனைஸ்வர பகவான் தான்  பன்னீர் சீஸ், பாலாடைக்கட்டி போன்றவற்றின் காரகர் என்கிறது ஜோதிடம். சுண்ணாம்பு சத்தின் காரகர் சனைஸ்வரர்தான் என மருத்துவ ஜோதிடம் அதை மேலும் உறுதி செய்கிறது.

பன்னீர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களுக்கு சனீஸ்வர பகவான் தான் முதன்மை காரக கிரகம் என்றாலும் அடிப்படையில் பாலில் இருந்து தயாரிப்பதால் சந்திரன் சேர்க்கையும் காரகமும் இருக்கத்தான் செய்கிறது. பன்னீரில் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் மெக்னீஷியம் நிறைந்திருக்கிறது. மெக்னீஷியத்தின் காரகர் சந்திரபகவான் என மருத்துவ ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

எலும்புகளுக்கு சூரியனும் காரகர் எனப் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. பன்னீர் பொருட்களில் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது. பொட்டாஷியம் சத்து இருந்தால்தான் கால்ஷியம் சரியான விகிதத்தில் எலும்பிற்குச் சென்றடையும். பொட்டாஷியத்தின் காரகர் சூரியன் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

பற்கள் மற்றும் எலும்புகள் தேயாமலும் சிதையாமலும் இருக்க ப்ளோரைட் அவசியம் என்கிறது விஞ்ஞானம். பன்னீர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களில் ப்ளோரைட் நிறைந்திருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ப்ளோரைடின் காரகர் சனீஸ்வரன்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

– அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.