Press "Enter" to skip to content

ஏழுமலையான் தரிசனத்திற்கு 26 மணி நேரம்…!

ஆயுத பூஜை, விஜயதசமி உள்பட நான்கு நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக ஏழுமலையானை பார்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
 திருமலையில் ஆயுத பூஜை, புரட்டாசி மாத 5ஆவது சனிக்கிழமை மற்றும் விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை காரணமாக ஏழுமலையானை பார்க பக்தர்கள் கூட்டம் குவிந்தது. அதனால் ஏழுமலையானை பார்க பக்தர்கள் 26 மணிநேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு தர்ம பார்வை தவிர அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது. விரைவு தரிசனத்தை மிகவும் குறைந்த அளவிலேயே அனுமதித்தது.
 தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டதோடு, குடிநீர், சிற்றுண்டி, பால் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. வாடகை அறை முன்பதிவும் பெருமளவில் குறைக்கப்பட்டதால் பக்தர்கள் வாடகை அறைகளை எளிதாக பெற்றுக் கொண்டனர்.
 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.