Press "Enter" to skip to content

ஷீரடி சாயிபாபாவின் புனித பாதுகை, ஒன்பது காசுகளைத் தரிசித்த பக்தர்கள்

திருச்சி மேக்குடியிலுள்ள ஷீரடி சாயிபாபா பொது நல வளாகத்தில் சாயி பாபாவின் புனித பாதுகை, ஒன்பது காசுகள் பார்வை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பார்வை செய்தனர்.
 ஷீரடி சாயிபாபா சமாதி நூற்றாண்டையொட்டி திருச்சி ஷீரடி சாயி அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை மேக்குடி சாயிபாபா பொது நல வளாகத்தில் சாயியின் பாதுகையும், 9 காசுகளும் வைக்கப்பட்டிருந்தது.
 இதையொட்டி காலையில் பூஜைகள் மகா ஆரத்தியுடன் தொடங்கின. இப்பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் பாதுகையையும், 9 காசுகளையும் பார்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 அவர்களுக்கு ஷீரடி சாயிபாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 8 மணிக்குத் தொடங்கிய பார்வை இரவு 8 மணி வரை நடைபெற்றது. சுமார் 35,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Source: dinamani