Go to ...
RSS Feed

ஐப்பசி பௌர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை


திருப்பதி திருமலையில் ஐப்பசி பௌர்ணமிக்கான கருடசேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடைபெறுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான பௌர்ணமி கருடசேவை நாளை இரவு நடைபெறுகிறது. 

அதில், உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 14-ம் தேதி கருடசேவை நடந்தது. இதையடுத்து, இதே மாதத்தில் பௌர்ணமி வருவதால் நாளை மீண்டும் மற்றொரு கருடசேவை நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: dinamani