Press "Enter" to skip to content

திருமலையில் புதன்கிழமைகளில் மூத்த குடிமக்கள் பார்வை ரத்து

திருமலையில் தேவஸ்தானம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கி வரும் இலசவ பார்வை புதன்கிழமை தோறும் காலை வேளைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்குகேற்றவாறு தேவஸ்தானம் தரிசனங்களை மாற்றி அமைத்தும், சிலவற்றை ரத்து செய்தும் வருகிறது. இந்நிலையில், தேவஸ்தானம் 65 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வெள்ளிக்கிழமை காலை வேளை தவிர, 1,400 பேருக்கு இலவச பார்வை வழங்கி வருகிறது. 
இதற்கான டோக்கன்களை மூத்த குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை அளித்து திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுன்ட்டரில் காலை 7 மணிமுதல் பெற்றுக் கொள்ளலாம். காலை 10 மணிக்கு 700 பேர், மதியம் 3 மணிக்கு 700 பேர் என தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். டோக்கன் பெற்றவர்களுக்கு மானிய விலை லட்டு, கூடுதல் விலை லட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அங்கிருந்து கோயில் எதிரில் உள்ள காத்திருப்பு அறைக்கு மின்சார வாகனங்கள் மற்றும் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 
இந்நிலையில், அவர்களுக்கு வழங்கி வரும் இலவச பார்வை புதன்கிழமை காலை வேளைகளில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக அன்று மதியம் 1000 பேருக்கு ஏழுமலையான் தரிசனத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.