Press "Enter" to skip to content

ஐப்பசி பௌர்ணமி: அனைத்து சிவாலயங்களிலும் இன்று அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் இன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. 

ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி தினத்தில் அருவுருவமாகத் திகழும் சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அபிஷேகப் பிரியரான சிவபெருமான், விவசாயம் செழிக்கவும், உலகில் பஞ்சம் நீங்கி, அனைவரும் உணவுக்குத் திண்டாடாமல் காக்கும் வகையில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய புகழ்பெற்ற சிவன் கோயில்களிலும், காரைக்கால் சிவலோகநாதசுவாமி கோயில், பார்வதீசுவரர், ஒப்பிலாமணியர் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பெரும்பான்மையான சிவன் கோயில்களில் இந்த அபிஷேகம் இன்று நடைபெறுகிறது. 

தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு, சிவலிங்கத்திலிருந்து அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
 

Source: dinamani