Press "Enter" to skip to content

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் ஆலய சம்பஸ்ரா அபிஷேக விழாவில் திருக்கல்யாண வைபவம் 

கும்பகோணம் மடத்துத்தெரு, சங்கர மடத்தின் அருகிலுள்ள, அருள்மிகு ஞானம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சம்பஸ்ரா அபிஷேக தினத்தினை முன்னிட்டு நேற்று மாலை திருக்கோயில் வளாகத்தில் அருள்மிகு காத்தியாயினி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 
இதில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி பார்வை செய்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் விழா நிறைவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் பக்தர்கள்  மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

 – குடந்தை ப.சரவணன் (9443171383)

Source: dinamani