Press "Enter" to skip to content

கபிலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது .
திருப்பதி கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமியின் போது, சிவனுக்கு அன்னாபிஷேகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. 
அதன்படி, ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, புதன்கிழமை மாலை கபிலேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை அவருக்கு சங்கு நாதத்துக்கு இடையில் சிறப்பு ஆராதனையும் நடத்தப்பட்டது. பின்னர், சிவலிங்கத்தின் மீது அன்னத்தை வைத்து, அதில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றால் குருக்கள் சிறப்பு அலங்காரம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

Source: dinamani

Mission News Theme by Compete Themes.