Press "Enter" to skip to content

திருமலையில் பௌர்ணமி கருட சேவை

திருமலையில் பௌர்ணமியை ஒட்டி கருடசேவையை காண வந்திருந்த பக்தர்கள். (வலது) கருடவாகனத்தில் வலம் வந்த மலையப்பஸ்வாமி.

திருமலையில் பெளர்ணமியையொட்டி, புதன்கிழமை கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையைக் கண்டு வருகின்றனர். 
அதன்படி, புதன்கிழமை ஜப்பசி மாத பௌர்ணமியையொட்டி, கருட சேவையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலை மாடவீதியில் கூடினர். 
புதன்கிழமை மாலை 7 முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி சர்வ அலங்கார நாயகனாக கருட வாகனத்தின் மேல் வலம் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 
அதைப் பார்த்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source: dinamani