Go to ...
RSS Feed

கும்பகோணம் ஸ்ரீ சோடச மகாலிங்கங்களுக்கு சிறப்பு அன்னதான அபிஷேகம்


கும்பகோணம், மகாமகக்  குளத்தைச் சுற்றியுள்ள,  சோடச மகாலிங்கங்களுக்கு சிறப்பு அன்னதான அபிஷேகம் நடைபெற்றது. 

கும்பகோணம், மகாமகக்குளத்தை சுற்றி அமைந்துள்ள, சோடச [16] மகாலிங்க மூர்த்திகளுக்கு ஐப்பசி பவுர்ணமியன்று காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேகங்களும், தூபதீபாரதணைகளும், அதனைத்  தொடர்ந்து அன்னாபிஷேக விழாவும்  மிகச் சிறப்பாக  நடைப்பெற்றது.  இதனை முன்னிட்டு, காலை 10  மணி முதல் பக்தர்கள் 16 மகாலிங்கசுவாமி சந்நதியில்  விளக்கேற்றி, சுவாமி  பார்வை செய்து சென்றார்கள்,
 
இவ்விழாவினை முன்னிட்டு வந்திருந்த  அனைத்து பக்தர்களுக்கும்  அறுசுவை விருந்து பரிமாரப்பட்டது. 
 
குடந்தை ப.சரவணன் 9443171383

Source: dinamani