Press "Enter" to skip to content

இந்த வார ராசி பலன்கள்: உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 26 – நவம்பர் 1) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெரியதொரு மாற்றங்கள் உருவாகக்கூடும். அறிவு, துணிச்சல், ஆற்றல் வெளிப்படும். வெற்றிகள் குவியும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் அன்பு பாசம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். மேலதிகாரிகளால் சிறு தொந்தரவுகள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்புகள் இராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகள் மூலம் லாபம் அள்ளுவீர்கள். பால் வியாபாரம் பலன் கொடுக்கும்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் கட்சி மேலிடம் திருப்தி தரும். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். கூட்டு சேராமல் தனித்து செயல்படுங்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மற்றவர்கள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

மனதிற்கு நிம்மதி தரும் பேச்சுகளைக் கேட்பீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய வீடு வாங்குவதற்கான சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களின் உதவி கிடைக்காது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிஅடைவீர்கள். கடன் வாங்கியும் வியாபாரத்தைப் பெருக்கலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத் துறையினருக்கு வரவேற்புகள் குறைந்தாலும் திறமை குறையாது. வருங்காலம் ஒளிமயமாகவே உள்ளது. பெண்மணிகள் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவார்கள். மாணவமணிகள் விளையாட்டில் முத்திரை பதிப்பீர்கள். சக மாணவர்கள், பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கி வளம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அவ்வப்போது சிறு உபாதைகள் தோன்றி மறையும். ஆலயப் பணிகளில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் அனுசரணையுடன் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக்கொள்வீர்கள். விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத் துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளால் பலன் அடைவார்கள். 

பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். எதிரிகளின் பலம் குறையும். வசீகரமான பேச்சின் மூலம் பிறரைக் கவருவீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தானிய விற்பனை லாபம் தரும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். உங்கள் சொற்களுக்கு மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு சக கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். மாணவமணிகள் எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்தால் வெற்றி வாகை சூடலாம். உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்திலிருந்து மீள்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும் துர்க்கையையும் வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 29.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

செயல்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி, நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வருமானத்திற்கும் குறைவு இராது. பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கடினமான வார்த்தைகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் யாவும் சுமுகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்கி, விவசாயத்தைப் பெருக்குவார்கள். கால்நடைப் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். அவர்களுக்கு எதிரான வழக்குகளில் திருப்பங்கள் உண்டாகலாம். கலைத் துறையினர் ஒப்பந்தங்களை நிறைவாகச் செய்து நற்பெயர் எடுக்க முனைவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 27, 29.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மனதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். ஆன்மிக சிந்தனைகளால் மனம் உற்சாகம் பெறும்.

உத்தியோகஸ்தர்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சற்று லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவால் கடன்கள் அடையும். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மேலிடத்தின் அதிருப்தி குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத் துறையினர் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடனும் திட்டங்களைச் செயல் படுத்துவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையோடு இருந்து சிக்கல்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும். 

பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 28, 29.

சந்திராஷ்டமம்: 26.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும். நீண்டகால முயற்சிகளிலொன்று நிறைவேறும். தந்தை வழி உறவுகளில் சில விரிசல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா சென்று வருவீர்கள். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவுடன் சில அரிய சாதனைகளைச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபகரமாகவே இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகள் கூடுதல் மகசூலைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிரிகளின் பலம் அதிகரிப்பதால் சற்று விட்டுக்கொடுத்து செயல்படவும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 26, 30.

சந்திராஷ்டமம்: 27, 28.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வெற்றிகள் தேடி வரும். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் சாதகமாக நடப்பார்கள். உங்கள் கருத்துக்கு மதிப்பு கூடும். செய்தொழிலை விருத்தி செய்ய வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், கௌரவம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு வகையில் கடன்கள் கிடைப்பதில் சிரமங்கள் உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்கி வருங்காலத்திற்கு அஸ்திவாரம் போடுவீர்கள். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட செயல்களில் தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெறுவார்கள். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 27, 31.

சந்திராஷ்டமம்: 29, 30.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதர சகோதரிகள் ஆதரவாக நடக்கத் தொடங்குவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் பெயரும் புகழும் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த வந்த தொல்லைகள் மறையும். மனதிற்கினிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வருமானம் உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகப் பொருள்களின் தரத்தைக் கூட்டவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகள் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். குறிக்கோளை எட்டும் வரை கடினமாக உழைக்கவும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்காது. சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: நந்தியம் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 29, 30.

சந்திராஷ்டமம்: 31, 1.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதற்கேற்ற செலவுகளும் உண்டு. உறவினர்கள் ஆதரவு குறைவாகவே இருக்கும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் முடிவு வெற்றிகரமாகவே அமையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக தேவையில்லாத அலைச்சல்கள் உருவாகும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் சிறிய தடைகளுக்குப்பிறகு லாபத்தைக் காண்பார்கள். புதிய கடைகளைத் திறக்கும் முடிவுகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு கடின முயற்சியால் கொள்முதல் லாபம் கிடைக்கும். கிழங்குகள், காய்கறிகளைப் பயிரிட்டு லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகளின் வாக்குக்கு மதிப்பு குறைந்து காணப்படும். கட்சி மேலிடம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதால் சற்று கவனமாகச் செயலாற்றவும். கலைத் துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் அக்கறையாக இருக்கவும். உடல்நலத்தில் சிறு குறைபாடுகள் தோன்றி மறையும். மாணவமணிகள் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 30, 31.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அனைத்து இடையூறுகளும் தவிடுபொடியாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். பிறரிடம் பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு தடுமாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் உதவியினால் பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். புதிய முதலீடுகளில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து இறங்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். விவசாய உபகரணங்களுக்கு செலவுகள் ஏற்படலாம். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்கள் கொண்டு வரும் எண்ணத்தைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். சக கலைஞர்களிடம் பாராட்டுகள் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு மண வாழ்க்கையில் சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். மாணவமணிகளில் நன்கு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

பரிகாரம்: வளசரவாக்கம் வேங்கட சுப்ரமணியரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 26, 31.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சாதகமும் பாதகமும் கலந்தே நடக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். மனஉளைச்சலும் உடல்ஆரோக்கிய குறைவும் உண்டாகும். வீண் செலவுகளும் உண்டாகலாம். 

உத்தியோகஸ்தர்கள் வார இறுதியில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆனால் சக ஊழியர்களின் ஆதரவினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பால் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணவரவு சரளமாக இருப்பதால் சில நல்ல காரியங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

பரிகாரம்: மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 31, 1.

சந்திராஷ்டமம்: இல்லை.

Source: dinamani

Mission News Theme by Compete Themes.