Press "Enter" to skip to content

கும்பகோணம் சோடச மகாலிங்கங்களுக்கு சிறப்பு அன்னதான, அபிஷேகம்

 
கும்பகோணம், மகாமகக் குளத்தைச் சுற்றியுள்ள, சோடச மகாலிங்கங்களுக்கு சிறப்பு அன்னதான, அபிஷேகம் நடைபெற்றது. 

கும்பகோணம், மகாமகக்குளத்தை சுற்றி அமைந்துள்ள, சோடச 16 மகாலிங்க மூர்த்திகளுக்கு 24-10-2018 காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேகங்களும், தூப தீபாரதனைகளும், அதனைத்தொடர்ந்து அன்னாபிஷேக விழாவும்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலை 10 மணி முதல் பக்தர்கள் 16 மகாலிங்கசுவாமி சந்நதியில் விளக்கேற்றி, சுவாமி பார்வை செய்தார்கள். 
 
இவ்விழாவினை முன்னிட்டு வந்திருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீஅபிமுகேஸ்வரர் ஆலயக் கிருத்திகை வழிபாட்டுக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

– குடந்தை ப.சரவணன் (9443171383)
 

Source: dinamani