Press "Enter" to skip to content

மரணத்திற்கு பிறகான வாழ்க்கை!

 
மறுபிறப்பு எனும் கேள்வி மற்றும் மரணத்திற்கு பின்பான வாழ்க்கை பற்றிய புதிரானது காலம் காலமாக  இருந்துகொண்டு தான் இருக்கிறது. 

முதலில் மரணம் என்றால் என்ன ?   

  • மரணம் என்பது நாம் காணும் இந்த உடலில் இருந்து பிரியும் ஆன்மா எனலாம். 
  • மரணம் என்பது ஒரு புது மற்றும் சிறந்த வாழ்வுக்கான துவக்க புள்ளி என்றால் அது மிகை ஆகாது. 
  • உங்களின், ஆளுமை மற்றும் சுய உணர்வினை மரணமானது முடிவுக்கு கொண்டு வராது. அது வெறுமனே தற்போது வாழ்ந்த வாழ்வைவிட , உயர்வடிவ வாழ்வுக்கு கதவைதிறப்பது போன்றதாகும். 
  • மரணம் மட்டுமே முழு வாழ்க்கைக்கு, நுழைவாயிலாகும்.

பிறப்பு, இறப்பு என்பது மாயையின் செப்பிடு வித்தை ஆகும்.  எவன் ஒருவன் பிறக்கிறானோ அவனுக்கு இறப்பு தொடங்குகிறது. எவன் ஒருவன் இறக்கிறானோ அவனுக்கு பிறப்பு தொடங்குகிறது. வாழ்க்கை மரணத்திற்கு அடிகோலுகிறது, அதே போல் மரணம் வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. பிறப்பு , இறப்பு  என்பது  இந்த உலகம் எனும் நாடக மேடைக்கு வெறுமனே நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களாகும் என சொல்லலாம்.

உண்மையில் சொல்வதென்றால், இங்கு ஒருவரும் வரவும் இல்லை, ஒருவரும் செல்லவும் இல்லை. ப்ரஹ்மமும் அல்லது நித்தியமும் மட்டும் தொடர்ந்து இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. வெறுமனே நாம் ஒரு வீட்டிலிருந்து வேறு ஒரு வீட்டிற்கு நகருவது  / செல்வது போல் தான் , நம் ஆன்மாவும் ஒரு உடலில் இருந்து வேறு ஒரு உடலுக்கு அனுபவத்தை பெறும் நோக்குடனே செல்கிறது. எப்படி ஒரு மனிதன் தனது கிழிந்த ஆடையை எறிந்து புது ஆடையை அணிய விரும்புகிறானோ , அது போலவே வெறுமனே ஆன்மாவும் தனது பழைய உடல் நைந்து / பிரயோசனம் இன்றி போகும் போகுது , வேறு ஒரு புது உடல் தேடி செல்கிறது / அடைகிறது. 

மரணம் என்பது வாழ்வின் முடிவு அல்ல.  வாழ்வு என்பது தொடர்ச்சியான, முடிவற்ற ஒரு செயல்முறை ஆகும். மரணம் என்பது,  ஒவ்வொரு ஆன்மாவும் தன் பரிணாம வளர்ச்சி பெறுவதற்க்காக கடந்து செல்லும் தேவையான ஒரு நிகழ்வு ஆகும். உடலை கலைப்பதென்பது ஒன்றும் தூக்கத்தை விட பெரிது இல்லை. சாதாரணமாக ஒரு மனிதன் உறங்குகிறான்  மற்றும் விழிக்கிறான் அது போல் தான் இறப்பதும் பிறப்பதும். இறப்பது போன்றது உறக்கம், விழிப்பது போன்றது பிறப்பு.எந்த ஒரு மனிதன் பாகுபாடு மற்றும் ஞானம் கொண்டு இதனை விளங்குகிறானோ அவனுக்கு இறப்பைப் பற்றிய பயம் இருக்காது. மரணம் என்பது வாழ்வின் ஒரு கதவு என்பதனை அவன் அறிவான். 

மேலும், வாழ்வெனும் ஒரு நூலை மரணம் எனும் ஒரு பெரிய கத்தியைக் கொண்டு துண்டாக்குவது மட்டும் தான் மரணத்தின் நிகழ்வு என்பது இல்லை என்றும் அது ஒரு பெரிய முழுமையான, சந்தோஷமான இருப்புக்கு அழைத்து செல்லும் / கதவைத் திறக்கும் திறவுகோல், தங்க சாவி , என்பதனையும் அவன் அறிவான். 

ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு வட்டத்தை போன்றதே. அதன் சுற்றளவைத் தேடி கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அதன் மையப்பகுதி ஒரு உடல். அந்த உடல் வெவ்வேறு உடலை அடைவது /  மாற்றிக்கொள்வது மட்டும் நிச்சயம். அதனால் ஏன் இறப்பைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்?

உச்ச / உயர்ந்த ஆத்மா அல்லது பரமாத்மா என்பது மரணமற்றது, சிதையாதது, காலமற்றது, காரணமற்றது மற்றும் , விண்வெளியற்ற எல்லை இல்லாதது . அது ஒரு மூலம் மற்றும் இந்த உடலுக்கு, மனதுக்கு, மற்றும் இந்த உலகத்துக்கு, கீழ்நிலை அற்றது  இந்த உடலானது பஞ்ச பூத சக்திகளால் ஆனது. பிறகு எப்படி காரணமற்ற, காலமற்ற, ஆகாயமற்ற நித்திய ஆன்மாவிற்கு மரணம் என்பது, ஏது?

பிறப்பு இறப்பிலிருந்து நீங்கள் விடிவித்துக்கொள்ள வேண்டும் எனில் அதற்க்கு உடம்பு தேவை படாது. உடம்பு என்பது நமது செயல்களாலும்  மற்றும் கர்மங்களாலும் உருவாவது தான். பயன் / லாபம் ஏதுமின்றி செய்யும் செயல்பாடே சிறந்தது. எப்போது ஒருவர் , ராக / துவேஷம் அதாவது விருப்பு , வெறுப்பு களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்கிறார்களோ, அப்போதே அவர் தனது கர்மாக்களில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்பது உண்மையாகிறது. 

எப்பொழுது ஒருவர் தனது தற்பெருமையை நீக்குகிறாரோ / கொல்கிறாரோ , அவரால் எளிதாக கர்மவினைகளிலிருந்து வெளிப்பட இயலும். நல்அறிவின் மூலம், அழியக்கூடியத்தைப் பற்றிய அறியாமையை எப்பொழுது நீங்கள் விட்டொழிக்கிறீர்களோ, அப்பொழுதே தற்பெருமையை அழித்துவிடலாம். எவன் ஒருவன், எல்லா ஒலிகளையம் கடந்த, பார்வைக்கு உட்படாத, தொடு உணர்வு, மற்றும் சுவை இவை அனைத்தையும் கடந்த  பண்பற்ற, அழிவற்ற, எல்லையற்ற, முடிவற்ற, தானே ஒளிருகிற நித்திய ஆத்மாவை உணருகிறானோ, அவன் மரணத்தின் பிடியில்/ வாயிலிருந்து தன்னை, விடிவித்துக்கொள்கிறான். 

கட்டுரை மேலும் தொடரும்…

– ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

சந்தேகங்களுக்கு: 98407 17857
 

Source: dinamani