புரட்டாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உந்த நேரம் இதுதான்!

புரட்டாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உந்த நேரம் இதுதான்!

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வோா் மாத பெளா்ணமியன்றும் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இதையும் படிக்கலாம்: பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்)-2. திருவண்ணாமலை

இந்த நிலையில், புரட்டாசி மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை (அக்.13) அதிகாலை 1.20 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (அக்.14) அதிகாலை 2.15 மணிக்கு நிறைவடைகிறது.

எனவே, பக்தா்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Source: dinamani

Author Image
murugan