இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்? வாங்க பார்க்கலாம்..!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 25 – அக்டோபர் 31) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் கைகூடும் காலமிது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எல்லோருடனும் அன்பாக நடந்து கொள்வீர்கள். சில வேலைகள் தடைகளை கடந்து நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் செயல்களைப் பதற்றப்படாமல் நிதானத்துடன் செய்யவும். வியாபாரிகள் கவனத்துடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தவும். முயற்சிகள் சிறிய தடங்கல்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு கால்நடைகளால் செலவுகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சிப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகவும். 

பெண்மணிகள் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வார்கள். சிலருக்கு கால் உபாதைகள், கழுத்தில் வலி இருக்கும். மருத்துவரை அணுகி உடல்நலம் பேணவும். மாணவமணிகள் படிப்பில் சற்று முன்னேற்றம் காண்பார்கள். முயற்சியில் சிறு தடைகள் இருப்பினும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றியும் அருகம்புல் கொடுத்தும் வழிபடுவது நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: 30, 31.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பணவரவு சீராக இருக்கும். சில திருப்பங்கள் ஏற்படும் காலமிது. எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகி மறையும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு சற்று அதிகரிக்கும். அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு இது சற்று லாபகரமான காலமாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் நன்கு உழைத்துப் பொருளீட்டுவார்கள். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது. கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்த்து விடுதல் நலம். 

பரிகாரம்: புதனன்று பெருமாளை கோயிலுக்குச் சென்று பார்கவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 27. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சீரான நிலைமை தென்படும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். வேலைகள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடையும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலிருந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் லாபம், நஷ்டம் இரண்டையும் மாறி மாறிச் சந்திப்பார்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் லாபத்தைக் காண்பார்கள். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் வசீகரமான பேச்சினால் அனைவரையும் வசப்படுத்துவீர்கள். தொண்டர்களும் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதற்கு சற்று தாமதமானாலும் பணவரவுக்கு குறைவு இராது. 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம், மன நலம் இரண்டும் சிறப்பாக அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: எட்டுமியன்று காலபைரவரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவார்கள். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். பலருடைய பாராட்டையும் பெறுவார்கள். கலைத்துறையினர் பணவரவு சரளமாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். 

பரிகாரம்: ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்து உடல்நலம் பேணவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருமளவுக்கு இருக்கும். உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

உத்தியோகஸ்தர்களின் திட்டமிட்ட முயற்சிகளால் அலுவலகப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடையும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நல்ல நிலைமையை காண்பார்கள். புதிய கிளைகளைத் திறப்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். 

அரசியல்வாதிகள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து வெற்றி நடை போடுவார்கள். மௌனம் சாதிப்பது பலவகையில் நல்லது. கலைத்துறையினருக்கு பாராட்டுகளும் கௌரவமும் கிடைக்கும். சுப போக வாழ்க்கை அமையும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு பெண்கள் மூலமாகவே உதவிகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யம் கூடும். மாணவமணிகள் கல்வியில் மேன்மை அடைவார்கள். பெற்றோர்களை அனுசரித்துச் செல்லவும். 

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிறு சிறு குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். முயற்சிகள் நிறைவேறுதில் சில தடைகள் ஏற்படும். பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். வீண்வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சில சிரமங்கள் ஏற்படும். நண்பர்களிடம் மனக்கசப்பு உருவாகலாம். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். வழக்குகளால் மனஉளைச்சல் ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகு ஒப்பந்தங்கள் கைகூடும். 

பெண்மணிகள் குடும்பத்தாருடன் ஒற்றுமையோடு நடந்துகொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.  மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

அலைச்சல்கள் அதிகரிக்கும். செயல்களில் தடைகள் உண்டாகும். தடைகள் விலகி முடிவு வெற்றிகரமாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். மனதில் அமைதி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பொருளாதார வசதிகள் மேன்மையடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முழு முயற்சி எடுப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட மானியங்கள் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்கள், கால்நடைகளை வாங்குவார்கள். 

அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்திடம் பொறுமையோடு நடந்துகொள்ளவும். தேவையற்ற அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்துவீர்கள். உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.

பரிகாரம்: செவ்வாய், கிருத்திகைகளில் வேலவனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 27,  30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வீண் அலைச்சல்கள் உண்டாகும். மதிப்பு மரியாதைக்கு எந்தக் குறையும் இல்லை. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கிம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாகவே நடந்து கொள்வார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தடங்கல் இருக்காது. 
வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். பொருள்களில் விற்பனை நல்ல முறையிலேயே நடக்கும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த பலனுண்டு.

அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். செல்வாக்கு உயரும். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். 

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியநமஸ்காரம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 26,  30. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் பெயரும் புகழும் வளரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காது வலி, அலர்ஜி ஏற்படும். மருத்துவ ஆலோசனை உடனுக்குடன் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வீண் அலைச்சல்கள் ஏற்படாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். 

விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடையும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவார்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வர். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறும். 

கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 28, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதையும் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். சேமிப்பு உயரும். கணிசமான முதலீடுகளைச் செய்வார்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். வம்பு வழக்குகள் சுமுகமாக முடியும்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும்.  புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் விளைச்சல் நிலங்களில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுந்து, முக்கியப் பயணங்களைச் செய்ய நேரிடும். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்மணிகள் வார்த்தைகளில் மயங்க வேண்டாம். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நன்மை பயக்கும். 

மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிரத்தையுடன் அதிகாலை வேலையில் கண்முழித்து பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 31. 

சந்திராஷ்டமம்: 25.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை வளரும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதவும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பனை செய்வார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு  கொள்முதல் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றி பெறுவார்கள். கட்சி மேலிடத்தின் கவனத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினரை தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: திங்களன்று விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 31. 

சந்திராஷ்டமம்:  26, 27.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மறதிகள் மறைந்து தெளிவுகள் பிறக்கும். தீய எண்ணங்களுக்கு இடம் தராமல், நேர் வழியில் செயல்படுங்கள். மதிப்பு, மரியாதை குறையாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே அமையும். துணிந்து காரியமாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முறையில் வியாபாரம் நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் தென்படும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் கிடைக்கும். தானிய உற்பத்தியில் திருப்தி இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. தொண்டர்களின் ஆதரவு வளரத்தொடங்கும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி, புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு உண்டு. மாணவமணிகளுக்கு மதிப்பெண்கள் சுமாராவே கிடைக்கும். முயற்சிகளை கைவிடாது செயல்படுத்தவும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை சென்று பார்வை செய்து வருதல் நலம். 

அனுகூலமான தினங்கள்:  30, 31. 

சந்திராஷ்டமம்: 28, 29.

 

Source: dinamani

Author Image
murugan